குல்தீப் யாதவிற்கு இந்திய அணியில் இடம் பறிபோக இதுவே காரணம் – இளம்வயது பயிற்சியாளர் பேட்டி

Kuldeep
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான குல்தீப் யாதவ் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். அறிமுகமான வெகு சீக்கிரமே தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இடம்பிடித்த அவர் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்தார். இதுவரை இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகள், 65 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் கிட்டத்தட்ட 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் இந்திய வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.

kuldeep

- Advertisement -

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோரது ஜோடி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேளையில் அந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் அவர்கள் இருவருக்குமே இடம் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக குல்தீப் யாதவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் சுத்தமாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது. மேலும் ஐபிஎல் தொடரிலும் அவர் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது ஃபெயிலியர் எங்கு நடந்தது என்பது குறித்து அவரது சிறுவயது பயிற்சியாளரான கபில்தேவ் பாண்டே சில கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டு வந்த போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களது ஆதிக்கம் காரணமாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

Kuldeep

மேலும் கிடைத்த வாய்ப்புகளிலும் அவர் ஒரு சில போட்டிகளில் விக்கெட் வீழ்த்த தவறியதால் அப்போதைய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரது நம்பிக்கையை அணியில் இழந்து விட்டார். மேலும் கூடுதலாக அவருக்கு ஏற்பட்ட காயம் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோருக்கு அவர் மீது இருந்த முழு நம்பிக்கையும் போய் அவரை சேர்க்க வேண்டுமா என்ற சூழலும் உருவாகியிருக்கலாம். இதன் காரணமாகவே அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இருக்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக ஒருநாள் அணியின் கேப்டனாக தகுதியுள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் மீண்டும் அவரால் தனது திறமையை நிரூபிக்க முடியாமல் போனது. அதுமட்டுமின்றி சில போட்டிகளில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டது அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். இதன் காரணமாகவே அவர் இதுவரை மீண்டும் தேசிய அணிக்கு திரும்பாமல் இருப்பதாக அவரது சிறுவயது பயிற்சியாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement