ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக ஒருநாள் அணியின் கேப்டனாக தகுதியுள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Rohith
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா மும்பையில் நடைபெற்ற பயிற்சியின் போது காயமடைந்ததன் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அதை அடுத்து ஒருநாள் தொடருக்கு அவர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அவரது காயம் குணமடைய மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை ஆகும் என்பதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது.

rohith 1

ஒருவேளை அவர் ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாத பட்சத்தில் அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டும். அந்த வகையில் ரோஹித் சர்மாவிற்கு மாற்றாக தென் ஆப்ரிக்க தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ள மூன்று வீரர்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். அவர்கள் ஏதோ :

- Advertisement -

Rahul-1

1) கே.எல் ராகுல் : ரோஹித்திற்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாக ராகுல் மாற வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தற்போதைய டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் துணை கேப்டனாக இருக்கும் ராகுல் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம். அதுமட்டுமன்றி பஞ்சாப் கிங்ஸ் அணியை மூன்று ஆண்டுகளாக அவர் வழி நடத்திய அனுபவம் உள்ளவர் என்பதனால் அவருக்கு கேப்டன்சி செல்ல வாய்ப்பு உள்ளது.

iyer 4

- Advertisement -

2) ஷ்ரேயாஸ் ஐயர் : ஏற்கனவே இந்திய அணியின் நான்காவது இடத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் டெல்லி அணிக்காக கேப்டனாகவும் சிறப்பாக செய்துள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் இவர் கேப்டன்சியை பறிகொடுத்து இருந்தாலும் கேப்டனாக அவர் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு ஒருநாள் கேப்டன் பதவி செல்ல வாய்ப்பு உள்ளது.

bumrah 1

3) பும்ரா : இந்திய அணியில் ஒரு மதிப்பிட முடியாத வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார். அவரிடம் கேப்டன்சி திறன்கள் உள்ளன என்று பலரும் கூறி வந்த வேளையில் அவரை கேப்டனாக மாற்றினால் தவறு ஏதும் இல்லை என்று கிரிக்கெட் நிபுணர்களும் கூறி வருவதால் அவருக்கு கேப்டன் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement