இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்படாதது ஏன்? – உண்மை காரணம் இதோ

Prasidh-Krishna
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ நேற்று ஜனவரி 12-ஆம் தேதி எதிர்வரும் 5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த இந்திய அணியில் 27 வயதான வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவிற்கு இடம் அளிக்கப்படாதது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது.

ஏனெனில் கடந்த மாதம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பிரசித் கிருஷ்ணா சற்று சுமாராக செயல்பட்டாலும் அவர் நல்ல திறனுடைய வேகப்பந்து வீச்சாளர் என்பதனாலும், ரபாடா போன்று அதிரடியாக பந்துவீசும் ஸ்டைலை கொண்டிருப்பதாலும் அவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இப்படி அறிமுகமான ஒரு தொடரோடு அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்திய அணியில் உண்மையாகவே பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்படாததற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வகையில் தென்னாப்பிரிக்க தொடரை முடித்து நாடு திரும்பிய பிரசித் கிருஷ்ணா இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரஞ்சி கோப்பையில் கர்நாடக அணிக்காக விளையாட விரும்பினார். அந்த வகையில் குஜராத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் வேளையில் அந்த போட்டியில் கர்நாடக அணிக்காக சார்பாக பிரசித் கிருஷ்ணா விளையாடினார்.

- Advertisement -

அப்படி அவர் விளையாடிய அந்த போட்டியின் இடையே காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறிய அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தசைப்பிடிப்பு மட்டும் ஏற்படவில்லை அதோடு சேர்ந்து குவாட்ரைசெப்ஸ் (Quadriceps) என்கிற காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த காயம் சரியாக 6 வாரங்கள் வரை ஆகும் என்ற மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாலே அவர் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 2வது டி20 போட்டியில் உலகிலேயே முதல் வீரராக ரோஹித் சர்மா.. படைக்க உள்ள உலக சாதனை

அதோடு இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் பயிற்சி போட்டிக்கான இந்திய ஏ அணியிலும் இடம் பெற்றிருந்த பிரசித் கிருஷ்ணா தற்போது அந்த பயிற்சி போட்டியிலும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அவர் விரைவில் காயத்திலிருந்து குணமடைந்தால் நிச்சயம் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான அணியில் இடம்பெறவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement