2வது டி20 போட்டியில் உலகிலேயே முதல் வீரராக ரோஹித் சர்மா.. படைக்க உள்ள உலக சாதனை

Rohit Sharma 4
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. இதைத்தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி ஜனவரி 14ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

ஐசிசி தரவரிசையில் உலகில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா 10வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானை அந்த போட்டியிலும் தோற்கடித்து ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றும் என்று நம்பப்படுகிறது. மேலும் முதல் போட்டியில் சொந்த காரணங்களுக்காக விலகிய விராட் கோலி அந்த போட்டியில் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் இந்திய அணியில் பலத்தையும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

ரோஹித்தின் சாதனை:
குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடி இருந்த விராட் கோலி 14 மாதங்கள் கழித்து இப்போட்டியில் விளையாட உள்ளார். முன்னதாக அவரைப் போலவே முதல் போட்டியில் 14 மாதங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் களமிறங்கிய ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே சுப்மன் கில்லுடன் ஏற்பட்ட தவறான புரிதலால் ரன் அவுட் முறையில் டக் அவுட்டானார்.

இந்த நிலைமையில் தம்முடைய டி20 கேரியரில் ரோஹித் சர்மா இதுவரை 149 போட்டியில் விளையாடியுள்ளார். எனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது போட்டியில் களமிறங்கும் போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலகிலேயே 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார். அவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்து வீரர் பால் ஸ்டெர்லிங் 134 போட்டிகளுடன் அதிக போட்டிகளில் விளையாடிய 2வது வீரராக உள்ளார்.

- Advertisement -

இது மட்டுமல்லாமல் அந்த போட்டியில் வெற்றியை பதிவு செய்யும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற எம்எஸ் தோனியின் வாழ்நாள் சாதனையையும் ரோஹித் சர்மா சமன் செய்வார். இதுவரை எம்எஸ் தோனி கேப்டனாக இந்தியாவுக்கு 41 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள நிலையில் ரோகித் சர்மா 40* வெற்றிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க: இந்தியா – ஆப்கானிஸ்தான் 2வது டி20 நடைபெறும் இந்தூர் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

இது போக 2வது போட்டியில் 5 சிக்சர்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன் என்ற இயன் மோர்கன் சாதனையை உடைத்து ரோகித் சர்மா புதிய உலக சாதனை படைப்பார். இதுவரை ரோகித் சர்மா கேப்டனாக 82 சிக்சர்கள் அடித்துள்ள நிலையில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் 86 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.

Advertisement