
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தற்போது 43 வயதை எட்டி உள்ளதால் இன்னும் எத்தனை ஆண்டுகள் அவர் கிரிக்கெட் விளையாடுவார் என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்களின் அன்புக்காகவும், பாசத்திற்காகவும் நிச்சயம் அடுத்த ஒரு சீசனில் விளையாடி விட்டு அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.
அதன் காரணமாக தோனியை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்ற முயற்சிகளிலும் சிஎஸ்கே அணி ஈடுபட்டு வருகிறது. சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளிலும் அசத்தலான கேப்டன்சி மற்றும் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள தோனி நிகழ்த்தாத சாதனைகளை இல்லை என்று கூறலாம்.
அந்த அளவிற்கு ஒரு கேப்டனாக ஏகப்பட்ட கோப்பைகளை அவர் பெற்றுக் கொடுத்துள்ளார். கேப்டனாக சாதித்தது தவிர்த்து ஒரு ஃபினிஷராகவும் இந்திய அணிக்கு பல்வேறு போட்டிகளில் தோனி வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். எப்பொழுதுமே தோனியின் அதிரடி ஆட்டத்தை காண ஒரு ரசிகர் பட்டாளம் காத்திருக்கும் என்றால் அது மிகையல்ல.
அந்த அளவிற்கு தோனியின் ஆட்டத்தை ரசிகர்கள் ரசித்து பார்த்து வருகின்றனர். இந்நிலையில் எப்பொழுதுமே தோனி எவ்வகையான கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கும் முன்னரும் இடதுபுறமாக வானத்தை நோக்கி பார்த்த பின்னரே மைதானத்திற்குள் நுழைவது வழக்கம் அப்படி ஏன் தோனி செய்கிறார் என்பது குறித்த விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் தற்போது தோனியே அந்த பழக்கத்திற்கு என்ன காரணம் என்று பதில் கொடுத்துள்ளார். இது குறித்து தோனி கூறுகையில் : நான் எப்பொழுதுமே களத்திற்கு வரும்போது ஒரு குழப்பம் இருக்கும் உள்ளே செல்லும்போது வலது காலை வைக்கலாமா? அல்லது இடது காலை வைக்கலாமா? என்று தோன்றும். அதன் பின்னர் நான் வலது காலை வைத்து செல்வேன்.
இதையும் படிங்க : மேட்ச் வின்னர்கள் வித்யாசம்.. இந்தியாவின் 2007 – 2024 டி20 உ.கோ வெற்றிகளில் சிறந்தது எது? ஹர்பஜன் பதில்
அதே போன்று இடது புறமாக நான் வானத்தைப் பார்ப்பதற்கு என்ன காரணம் என்றால் அந்த திசையில் தான் பெரும்பாலும் சூரியன் இருக்கும். அதனால் நான் அந்த திசையில் பார்ப்பது வழக்கம். நான் எப்போதும் வலது புறமாக நோக்கி வானத்தை பார்த்ததே கிடையாது. எனக்கு மைதானத்திற்குள் நுழைய முன்னரே இடதுபுறம் மேலே பார்க்க வேண்டும் என்ற ஞாபகம் வரும் அதன் காரணமாகவே நான் இடது புறமாக வானத்தை பார்த்துவிட்டு செல்வேன் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.