மேட்ச் வின்னர்கள் வித்யாசம்.. இந்தியாவின் 2007 – 2024 டி20 உ.கோ வெற்றிகளில் சிறந்தது எது? ஹர்பஜன் பதில்

Harbhajan Singh 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றது ரசிகர்களால் மறக்க முடியாததாக அமைந்தது. ரோஹித் சர்மா தலைமையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அத்தொடரில் ஆரம்பம் முதலே எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

அதனால் 2007க்குப்பின் 17 வருடங்கள் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தொடர் தோல்விகளையும் நிறுத்தியது. அந்த வெற்றியை ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் இந்தியாவின் 2007 மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிகளில் சிறந்தது எது? என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பதில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சிறந்த வெற்றி:

குறிப்பாக 2024 வெற்றியை விட தென்னாப்பிரிக்காவில் தோனி தலைமையில் பெற்ற 2007 டி20 உலகக் கோப்பை வெற்றி சிறந்தது என்று ஹர்பஜன் கூறியுள்ளார். அதற்கான காரணம் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒட்டுமொத்தமாக டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை நீங்கள் பார்க்கும் போது அதில் 2007 விட அதிகமான மேட்ச் வின்னர்கள் இருந்தார்கள்”

“2007இல் டி20 என்பது எங்களுக்கு பெரிதாக என்னவென்று தெரியாத புதிய ஃபார்மட்டாக இருந்தது. நாங்கள் முதல் முறையாக விளையாடினோம். உண்மையில் அந்த சமயத்தில் டி20 பற்றிய புரிதல் எங்களுக்கு தெரியாது. நாங்கள் போகிறப் போக்கில் விளையாடி தொடர்ந்து வென்றோம். மேலும் 2007இல் நிறைய நட்சத்திர வீரர்கள் அணியில் இல்லை”

- Advertisement -

மகத்தான 2007 வெற்றி:

“யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், நான், அஜித் அகர்கர் போன்றவர்களை தவிர்த்து மற்றவர்கள் புதுமுக வீரர்களாக இருந்தனர். எம்எஸ் தோனி முதல் முறையாக கேப்டனாக செயல்பட்டார். ஆனால் 2024இல் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா போன்ற அனைவருமே பெரிய மேட்ச் வின்னர்கள். அதன் பின் சூரியகுமார், அக்சர் பட்டேல், ரிஷப் பண்ட் ஆகியோரும் இருந்தனர்”

இதையும் படிங்க: அவங்களுக்காக ஸ்கெட்ச் போடுவாரு.. விராட், தோனியை விட ரோஹித்தின் ஸ்பெஷல் கேப்டன்சி பற்றி அஸ்வின்

“அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தொடர் முழுவதும் அசத்தினர். அவர்கள் அனைவருமே மேட்ச் வின்னர்கள். தொடர் முழுவதும் அசத்தினார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2007 உலகக் கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமையில் தோற்ற இந்தியா மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்திருந்தது. அப்போது பெரும்பாலும் இளம் வீரர்களுடன் விளையாடி வெற்றி கண்ட தோனி தலைமையிலான படை இந்திய கிரிக்கெட்டை மறுமலர்ச்சியடைய வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement