அவங்களுக்காக ஸ்கெட்ச் போடுவாரு.. விராட், தோனியை விட ரோஹித்தின் ஸ்பெஷல் கேப்டன்சி பற்றி அஸ்வின்

R Ashwin 2
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் இந்திய அணியை எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக கட்டமைத்து முன்னோக்கி நடக்க முக்கிய காரணமாக திகழ்கின்றனர். அதில் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற தோனி வருங்காலத்திற்காக ஒரு கட்டத்திற்கு பின் சீனியர்களை கழற்றி விட்டு விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தார்.

அதன் பின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியில் ஃபிட்னெஸை கட்டாயமாக்கினர். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரணிகளை துவம்சம் செய்யும் அளவுக்கு இந்தியாவை வலுவான அணியாக மாற்றிய அவர் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அவர்களைத் தொடர்ந்து தற்போது சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டுமென்ற கோட்பாட்டை ரோஹித் சர்மா கடைபிடிக்கிறார்.

- Advertisement -

தோனி – விராட் கோலி:

அவரது தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்த தோல்விகளையும் உடைத்துள்ளது. இந்நிலையில் தோனி மற்றும் விராட் கோலியை விட எதிரணியை வீழ்த்துவதற்காக ரோஹித் சர்மா நீண்ட நேரம் உட்கார்ந்து திட்டங்களை வகுப்பார் என்று அவர்களுடைய தலைமையில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

அந்த மூவருக்க்கிடையே உள்ள வித்தியாசம் பற்றி சமீபத்திய பேட்டியில் அஸ்வின் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் பற்றி 2 – 3 நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அவர் எப்போதும் அணியின் சூழ்நிலையை மிருதுவாக வைத்திருப்பார். அதற்காக அவர் முயற்சிகளை போடுவார். சமநிலையுடன் இருக்கக்கூடிய அவர் தந்திரோபாயங்களில் மிகவும் வலுவானவர்”

- Advertisement -

வித்யாசமான ரோஹித் சர்மா:

“தோனி மற்றும் விராட் கோலியும் அதில் வலுவானவர்கள் தான். ஆனால் ரோஹித் சர்மா தந்திரோபாயங்களில் அதிகமாக வேலை செய்வார். பெரிய போட்டி அல்லது தொடர் வந்தால் அதற்கு முன்பாக ரோஹித் சர்மா பயிற்சியாளர்கள் மற்றும் அனலைஸ்ட் குழுவுடன் உட்கார்ந்து குறிப்பிட்ட எதிரணி பேட்ஸ்மேனின் பலவீனம் என்ன, எதிரணி பவுலருக்கு எதிராக என்ன திட்டம் வகுக்கலாம் போன்றவற்றில் தயாராவார்”

இதையும் படிங்க: ஸ்டைலே வேற.. தவறிலிருந்து கத்துக்க சொல்வாரு.. தோனி – ரோஹித் கேப்டன்ஷிப் வித்யாசம் பற்றி ஹர்பஜன்

“அது தான் அவருடைய பலமாகும். அதே சமயம் அவர் அணியை மெதுவாக வைத்திருந்து அனைத்து வீரர்களுக்கும் ஆதரவு கொடுப்பார். அவர் ஒரு வீரரை தேர்வு செய்து விட்டால் பின்னர் 100% ஆதரவு கொடுப்பார். என்னுடைய கேரியரில் பெரும்பாலும் இந்த 3 கேப்டன்கள் தலைமையில் தான் நான் விளையாடியுள்ளேன்” என்று கூறினார்.

Advertisement