- Advertisement -
இந்திய கிரிக்கெட்

5 ஆவது இடத்தில் களமிறங்க வேண்டிய கே.எல் ராகுல் 6 ஆவது இடத்தில் இறங்க காரணம் கம்பீர் தான் – என்ன ஆனது?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று நாக்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

கே.எல் ராகுல் களமிறங்க தாமதமாகியது ஏன் ? :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியான்து இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

பின்னர் 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது விக்கெட்டை பறிகொடுத்தது. இருந்தாலும் மிடில் ஆர்டரில் சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல் ஆகிறது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி எளிதான வெற்றியை நோக்கி சென்றது.

இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் மூன்றாவது விக்கெட்டாக ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்து வெளியேறிய போது ஐந்தாவது வீரராக கே.எல் ராகுல் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அக்சர் பட்டேல் பேட்டிங் செய்ய வந்தார் அது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இருப்பினும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ய செய்த அக்சர் பட்டேல் 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். ஆனால் தனது வழக்கமான ஐந்தாவது இடத்தை விட்டு ஆறாவது இடத்தில் களமிறங்கிய கே.எல் ராகுல் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இப்படி கே.எல் ராகுல் தனது ஐந்தாவது இடத்திலிருந்து ஆறாம் இடத்தில் களமிறங்க காரணமே பயிற்சியாளர் கம்பீர் தான் என்று கூறப்படுகிறது.

இதையும் படிடுங்க : இதை செஞ்சுமா சொந்த மண்ணில் கூட ஸ்ரேயாஸை சந்தேகப்படுறிங்க.. இந்திய அணி மீது பாண்டிங் அதிருப்தி

ஏனெனில் எப்போதுமே கம்பீர் இந்திய அணியில் வலது கை, இடது கைவ வீரர்கள் காம்பினேஷன் விளையாட அதிக விருப்பம் கொண்டவர் என்பதை விரும்புபவார்ர். அதன் காரணமாகவே ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்ததும் கே.எல் ராகுலை களம் இறக்காமல் அவருக்கு முன்னதாக அக்சர் பட்டேலை களமிறக்கியிருக்கார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -