
அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடியிருந்த இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த தொடர்களுக்கான அட்டவணையும் ஏற்கனவே முறைப்படி அறிவிக்கப்பட்டு இந்த 2 தொடர்களுக்கான இந்திய அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அந்த வகையில் வெளியான இந்திய ஒருநாள் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஹர்சித் ராணா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் பும்ரா இந்த தொடரில் இடம்பெறாததுக்கு காரணம் என்ன? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரானது நடைபெறயுள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா செயல்பட இருக்கிறார்.
இதன் காரணமாகவே அவருக்கு ஓய்வு வழங்கும் வகையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவரை சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு அவருடன் ஹார்டிக் பாண்டியாவும் இந்த தொடரில் ஓய்வினை பெற்றுள்ளார். இருந்தாலும் அவர்கள் இருவருமே அடுத்து வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 163 ரன்ஸ்.. 7 மைதானங்களில் தனித்துவ சாதனை.. இங்கிலாந்தை பந்தாடி வார்னருக்கு பின் சாதனை படைத்த ஹெட்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி வடோதாராவில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.