ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும்?- தாமதம் ஏன்?

IND-vs-AFG
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியையே சந்திக்காமல் சென்ற இந்திய அணியானது நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவி ஐசிசி கோப்பையை தவறவிட்டது. அதனை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி இந்த ஆண்டு நடைபெற ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு தற்போது அணி வீரர்களை தேர்வு செய்து வருகிறது.

அந்த வகையில் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மட்டுமே இந்திய அணிக்காக அட்டவணையில் உள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் அணித்தேர்வு அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு கடந்த 2022-ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்த ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் எதிர்வரும் டி20 உலக கோப்பையில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக அவர்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற தகவல்களும் வெளியாகியது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி கடந்த வெள்ளிக்கிழமையே வெளியாகும் இன்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இன்று வரை இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியாகவில்லை. இதற்கு முக்கிய காரணமாக சில விடயங்கள் பார்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது டி20 எதிர்காலம் மற்றும் டி20 உலக கோப்பையில் அவர்கள் விளையாடுவார்களா? இல்லையா? என்பது குறித்த அனைத்து கேள்விகளுக்கும் இந்த அணித்தேர்வின் மூலமாக மட்டுமே விடை தெரியும்.

இதையும் படிங்க : இந்தியாவை பத்தி நீங்க சொன்னதை நினச்சா சிரிப்பு தான் வருது.. மைக்கேல் வாகனுக்கு அஸ்வின் பதிலடி

இதன் காரணமாக தற்போது பிசிசிஐ-யின் முக்கிய நிர்வாகிகள் ஜனவரி 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்வுக்குழுவினருடன் மீட்டிங் நடத்த இருப்பதோடு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது இடம் குறித்த ஆலோசனைகளையும் நடத்த உள்ளது. இதன் காரணமாகவே தற்போது அணித்தேர்வு தாமதம் ஆகியுள்ளதாகவும் நிச்சயம் ஜனவரி 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் இந்திய அணி அறிவிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Advertisement