இந்தியாவை பத்தி நீங்க சொன்னதை நினச்சா சிரிப்பு தான் வருது.. மைக்கேல் வாகனுக்கு அஸ்வின் பதிலடி

Ravichandran Ashwin
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அங்கு நடைபெற்ற 3 வகையான கிரிக்கெட் தொடர்களிலும் வெற்றிகரமாக செயல்பட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை சமன் செய்த இந்தியா அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை வென்றது. மேலும் கடைசியாக நடந்த டெஸ்ட் தொடரையும் சமன் செய்த இந்தியா சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை எந்த தொடரிலும் கோப்பையை முழுமையாக வெல்ல விடவில்லை.

குறிப்பாக டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்காவை 2வது போட்டியில் 55 ரன்களுக்கு சுருட்டி வீசிய இந்தியா அபார வெற்றி பெற்றது. அதன் வாயிலாக தென்னாப்பிரிக்காவில் 13 வருடங்கள் கழித்து தொடரை சமன் செய்தது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாகவே அமைந்தது.

- Advertisement -

அஸ்வின் பதிலடி:
இருப்பினும் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த போது ஏராளமான திறமை இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் குறைந்த வெற்றிகளை பெறும் அணியாக இந்தியா திகழ்வதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்திருந்தார். குறிப்பாக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றதை தவிர்த்து கடந்த 10 வருடங்களாக திறமை இருந்தும் இந்தியா ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவருடைய இந்த கருத்துக்கு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளது பின்வருமாறு. “உலகிலேயே இந்தியா குறைந்த சாதனை வெற்றிகளை பெறும் அணியாக இருப்பதாக முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்திருந்தார். ஆம் நாங்கள் கடந்த பல வருடங்களாக ஐசிசி கோப்பையை வெல்லவில்லை”

- Advertisement -

“இருப்பினும் நாங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை பவர் ஹவுஸ் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றிகளை பெறுவதில் நாங்கள் சிறந்த அணியாக இருக்கிறோம். நாங்கள் பல மகத்தான வெற்றி முடிவுகளை கண்டுள்ளோம்”

இதையும் படிங்க: பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூருக்கு பதிலா டெஸ்ட் அணியில் அந்த பவுலருக்கு சேன்ஸ் கொடுத்திருக்கலாம் – சல்மான் பட் பேட்டி

“மைக்கேல் வாகன் அப்படி சொன்ன பின் இந்தியா குறைந்த வெற்றிகளை பெறும் அணியாக இருக்கிறதா என்பதை பற்றி எங்களுடைய நாட்டிலேயே நிறைய வல்லுநர்கள் பேசத் துவங்கியுள்ளனர். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமெனில் அதை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது” என்று கூறினார். அதாவது ஐசிசி கோப்பைகளை வெல்லா விட்டாலும் கடந்த 10 வருடங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் வெளிநாடுகளில் இந்தியா நிறைய வெற்றிகளை குவித்துள்ளதாக அஸ்வின் பெருமையுடன் பதிலடியை கொடுத்துள்ளார்.

Advertisement