பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூருக்கு பதிலா டெஸ்ட் அணியில் அந்த பவுலருக்கு சேன்ஸ் கொடுத்திருக்கலாம் – சல்மான் பட் பேட்டி

Salman-Butt
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் தென்னாப்பிரிக்கா மண்ணில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரின் முதல் போட்டியில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் என்கிற வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கி தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

அதனை தொடர்ந்து இரண்டாவதாக கேப்டவுன் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மீண்டும் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்து அவமான தோல்வியில் இருந்து தப்பித்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க முக்கிய காரணமே மோசமான பந்து வீச்சு தான் என்ற கருத்து பலரது மத்தியிலும் இருந்தது. அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஷர்துல் தாகூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர்.

இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்குக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்ததற்கு நிச்சயம் ரசிகர்கள் கூறுவது போல மோசமான பந்துவீச்சு தான் காரணமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அதிகமாக ரன்களை விட்டுக் கொடுத்தனர்.

இதையும் படிங்க : கட்டம் கட்டி ஸ்கெட்ச் போட்ட ஐசிசி.. 2024 டி20 உ.கோ அட்டவணை பார்த்து அலறும் தெ.ஆ

என்னை பொறுத்தவரை அவர்களுக்கு பதிலாக இந்திய அணி அர்ஷ்தீப் சிங்கிற்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஏனெனில் அவரால் 135 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீச முடியும். அதே நேரத்தில் அவரால் அதே வேகத்தில் பந்தை ஸ்விங் செய்யவும் முடியும். அவரது பந்து நிச்சயம் டெஸ்ட் போட்டிகளுக்கு சாதகமாக இருந்திருக்கும் என்று தான் கருதுவதாக சல்மான் பட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement