கட்டம் கட்டி ஸ்கெட்ச் போட்ட ஐசிசி.. 2024 டி20 உ.கோ அட்டவணை பார்த்து அலறும் தெ.ஆ

IND and RSA and NED
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பை கோலகலமாக துவங்க உள்ளது. டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெற உள்ள இந்த தொடருக்கான அட்டவணையை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டவது. அதன் படி ஜூன் மாதம் 1ஆம் தேதி நியூயார்க் நகரில் துவங்கும் இத்தொடர் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் நிறைவு பெறுகிறது.

இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த உலகக் கோப்பையில் எக்ஸ்ட்ராவாக 4 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 20 கிரிக்கெட் அணிகள் 55 போட்டிகளில் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

- Advertisement -

ஐசிசியின் ஸ்கெட்ச்:
அந்த 20 அணிகளும் தலா 4 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக லீக் சுற்றில் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கே தான் அட்டவணை உருவாக்கும் போது ஐசிசி கச்சிதமாக காய்களை நகர்த்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தான் மொத்த உலகக் கோப்பையின் வருமானத்தை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம்.

எனவே அந்தப் போட்டி எப்படியாவது நடைபெற்றே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ள ஐசிசி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை குரூப் ஏ பிரிவில் சேர்த்து ஜூன் 9ஆம் தேதி மோத விடுகிறது 2023 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டியின் டிக்கெட் ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்தும் அதை பொருட்படுத்தாமல் ரசிகர்கள் கூட்டமாக வந்து கல்லாவை நிரம்பியதை மனதில் வைத்து மீண்டும் ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளது.

- Advertisement -

அதே போல மற்றொரு பரம எதிரிகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுவதற்காகவே குரூப் பி அவ்விரு அணிகளை ஐசிசி கோர்த்து விட்டுள்ளது. அதை விட 2022 டி20 உலகக் கோப்பையில் செமி ஃபைனல் செல்வதற்கு தயாராக இருந்த தென்னாபிரிக்காவை கடைசி நேரத்தில் நெதர்லாந்து தோற்கடித்து வெளியேற்றியது.

இதையும் படிங்க: ரசித் கான் இருக்காரு ஆனா ஒரு ட்விஸ்ட்.. இந்திய டி20 தொடருக்கான அணியை அறிவித்த ஆப்கானிஸ்தான்

அதே போல 2023 உலகக் கோப்பையிலும் வெறித்தனமாக விளையாடிய தென்னாப்பிரிக்காவை முக்கிய போட்டியில் முதல் முறையாக நெதர்லாந்து தோற்கடித்து வரலாற்றை மாற்றியதை முடியாது. எனவே அதை அடிப்படையாக வைத்து இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா இருக்கும் குரூப் டி பிரிவில் நெதர்லாந்தை ஐசிசி சேர்த்து விட்டுள்ளது. அதனால் ஜூன் 8ஆம் தேதி நெதர்லாந்தை எதிர்கொள்வதை நினைத்து தென்னாப்பிரிக்க ரசிகர்கள் இப்போதே அலறுகிறார்கள் என்றால் மிகையாகாது.

Advertisement