ரசித் கான் இருக்காரு ஆனா ஒரு ட்விஸ்ட்.. இந்திய டி20 தொடருக்கான அணியை அறிவித்த ஆப்கானிஸ்தான்

IND vs AFG
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக முடிந்த டெஸ்ட் தொடரை 13 வருடங்கள் கழித்து சமன் செய்த ஆறுதலுடன் இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்பியுள்ளது. இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு இரு அணிகளும் தயாராக உதவும் வகையில் இந்த தொடர் நடைபெற உள்ளது.

இவ்விரு அணிகளில் ஆப்கானிஸ்தான் சற்று கத்துக் குட்டியாக பார்க்கப்படுவதால் இந்திய அணியில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவருமே காயத்தை சந்தித்துள்ளதால் கேப்டனாக விளையாட போவது யார், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடுவார்களா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணி:
இந்நிலையில் இத்தொடருக்கான 19 பேர் கொண்ட தங்களுடைய அணியை ஆப்கானிஸ்தான் வாரியம் வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஆப்கானிஸ்தானின் கேப்டனான நட்சத்திர வீரர் ரசித் கான் சமீபத்தில் காயத்திற்காக முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதனால் இந்த தொடரில் சாதாரண வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் ஒரு போட்டியில் கூட விளையாடுவது சந்தேகம் என்று ஆப்கானிஸ்தான் வாரியம் கூறியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ஏனெனில் விராட் கோலி உட்பட அனைத்து தரமான பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுக்கக்கூடிய அவர் டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை உலகின் நம்பர் ஒன் பவுலராக பார்க்கப்படுகிறார். எனவே அவர் விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் ஆப்கானிஸ்தான் அணிக்கு பின்னடைவாகவும் இருக்கும் என்றால் மிகையாகாது. இருப்பினும் அவருக்கு பதிலாக சமீபத்தில் சார்ஜாவில் நிறைவு பெற்ற ஐக்கிய அரபு நாடுகளுக்கு எதிரான டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இப்ராஹிம் ஜாட்ரான் இத்தொடரில் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அவரது தலைமையில் 2023 உலகக் கோப்பையில் சில மகத்தான வெற்றிகளை பெற முக்கிய பங்காற்றிய முகமது நபி, முஜீப் மற்றும் விராட் கோலியுடன் சண்டையிட்ட நவீன்-உல்-ஹக் போன்ற வீரர்கள் இந்தியாவுக்கு சவாலை கொடுப்பதற்காக இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்திய தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி பின்வருமாறு.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஏற்பட்ட தாமதம் – இவர்கள் 2 பேரும் தான் காரணமா?

இப்ராஹிம் ஜால்ரான் (கேப்டன்), ரஹ்மனுதுல்லா குர்பாஸ், இக்ரம் கில், ஹசரத்துல்லா சாஸாய், ரஹமத் ஷா, நஜிபுல்லா ஜாட்ரான், முகமது நபி, கரீம் ஜானத், அசமத்துல்லா ஓமர்சாய், சரபுதீன் அஷ்ரப், முஜீப் உர் ரகுமான், ஃபாசல் ஹக் பரூக்கி, நவீன்-உல்-ஹக், நூர் அஹ்மத், முகமது சலீம், காய்ஸ் அகமது, குல்பதின் நைப், ரஷீத் கான்

Advertisement