ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஏற்பட்ட தாமதம் – இவர்கள் 2 பேரும் தான் காரணமா?

BCCI
- Advertisement -

சமீபத்தில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று விதமான சர்வதேச தொடர்களிலும் பங்கேற்று விளையாடியது. அதன்படி நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணியானது அதற்கடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது.

மேலும் அதற்கு அடுத்ததாக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (1-1) என்ற கணக்கில் சமன் செய்து வரலாறு படைத்தது. அதனை தொடர்ந்து நாடு திரும்பியுள்ள இந்திய அணியானது அடுத்ததாக எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக கடைசி சர்வதேச டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது எதிர்வரும் ஜனவரி 11-ம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்றே ஜனவரி 5-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஜனவரி 6-ஆம் தேதியான இன்றும் இதுவரை இந்திய அணி வீரர்களின் பட்டியலை வெளியிடவில்லை. இப்படி பிசிசிஐ இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை தாமதப்படுத்துவதற்கு என்ன காரணம்? என்பதே தற்போது பலரது மத்தியிலும் கேள்வியாக எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டிற்கு பிறகு எவ்வித சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் எதிர்வரும் டி20 உலக கோப்பையில் தாங்கள் விளையாட இருப்பதாக தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளதால் இந்த ஆப்கானிஸ்தான் தொடரில் அவர்கள் இருவரையும் சேர்க்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலை பிசிசிஐ-க்கு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அவர மாதிரி பிளேயர் ஒவ்வொரு நாட்டுலயும் இருந்தா.. டெஸ்ட் மேட்ச் என்னைக்கும் அழியாது.. இர்பான் பதான்

இந்த அழுத்தம் காரணமாகவே தற்போது வரை பிசிசிஐ வீரர்களின் தேர்வை தாமதப்படுத்தியுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற அனுபவ வீரர்களே வாய் திறந்து வாய்ப்பு கேட்கும் போது அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் எப்படி இருக்க முடியும்? என்ற குழப்பத்தினாலே பிசிசிஐ அணி தேர்வை தாமதப்படுத்தி உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement