அவர மாதிரி பிளேயர் ஒவ்வொரு நாட்டுலயும் இருந்தா.. டெஸ்ட் மேட்ச் என்னைக்கும் அழியாது.. இர்பான் பதான் 

Irfan Pathan 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் இந்தியா சமன் செய்து நாடு திரும்பியுள்ளது. அதன் காரணமாக சவாலான தென்னாப்பிரிக்காவில் 13 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்து இந்தியா சாதனை படைத்தது. குறிப்பாக முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை கொடுத்த தென்னாப்பிரிக்காவை 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

கேப் டவுன் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை எடுத்த சிராஜ் தென்னாபிரிக்காவை 55 ரன்களுக்கு சுருட்ட உதவினார். அவருக்கு நிகராக 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் எடுத்த ஜஸ்பிரித் பும்ரா வெற்றியில் முக்கிய பங்காற்றி கேப் டவுன் நகரில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா சாதனை படைக்க உதவி செய்தார்.

- Advertisement -

டெஸ்டுக்கு முன்னுரிமை:
மேலும் 2 போட்டிகளில் மொத்தம் 12 விக்கெட்கள் எடுத்த அவர் தொடர் நாயகன் விருதையும் வென்றார். அதன் வாயிலாக தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் நாயகன் விருது பெற்ற முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையையும் பும்ரா படைத்தார். முன்னதாக 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயத்தை சந்தித்த பும்ரா மீண்டும் 2 முறை குணமடைந்து காயமடைந்து வெளியேறியதை மறக்க முடியாது.

அதனால் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் விளையாடுவதை நிறுத்தினால் மட்டுமே உங்களால் நீடித்து விளையாட முடியும் என்று பும்ராவுக்கு நிறைய முன்னாள் வீரர்கள் ஆலோசனை கொடுத்தார்கள். அது போன்ற சூழ்நிலையில் பும்ரா நினைத்திருந்தால் கண்டிப்பாக 5 நாட்கள் நடைபெறக்கூடிய கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெற்றிருக்கலாம். சொல்லப்போனால் ஹர்திக் பாண்டியா இதே போல காயத்தை சந்தித்த பின் மீண்டும் டெஸ்ட் போட்டிகளை விளையாடாமல் பணத்துக்காக டி20 போன்ற வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்.

- Advertisement -

ஆனால் அவ்வாறு செய்யாத பும்ராவை போன்ற வீரர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருந்தால் அழிந்து வரும் டெஸ்ட் போட்டிகள் மீண்டும் மலரும் என இர்பான் பதான் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “மிகப்பெரிய அறுவை சிகிச்சைக்கு பின்பும் முன்னுரிமை கொடுக்கும் பும்ராவை விட டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வேறொரு பிராண்ட் அம்பாசிடர் இருக்க முடியாது”

இதையும் படிங்க: சிஎஸ்கே ரசிகர்கள் பற்றி சொல்லுங்கன்னு அஸ்வின் கேட்டதும்.. பாட்டு பாடி 2008 பாசத்தை காட்டிய மகாயா நிடினி

“ஒருவேளை பும்ராவை போல ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பவுலர் இருந்தால் டெஸ்ட் போட்டிகள் தொடர்ந்து மலரும். காயத்துக்கு பின்பும் இந்தளவுக்கு சிறப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீசும் பும்ராவின் அணுகுமுறை மீது நான் காதலில் விழுந்துள்ளேன். அவர் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உத்வேகமாக இருக்கிறார்” என்று கூறினார்.

Advertisement