- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இம்முறை அகமதாபாத் பயோ பபுள் வளையத்தில் கொரோனா பரவியது இப்படித்தானாம் – விவரம் இதோ

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நிறைவு பெற்று அதில் தோற்ற கையோடு தற்போது இந்திய அணி நாடு திரும்பி உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் முதலாவதாக அகமதாபாத் நகரில் ஒரு நாள் போட்டிகளும், கொல்கத்தா நகரில் டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.

இதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டு அகமதாபாத் நகரில் பயிற்சியை மேற்கொண்டு வரும் இவ்வேளையில் இன்று இந்திய அணியை சேர்ந்த ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

- Advertisement -

இவ்வளவு க்டுமையான பயோ பபுள் கட்டுப்பாடுகளையும் மீறி இந்திய அணிக்குள் தற்போது எவ்வாறு கொரோனா பரவியது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு விடையாக தற்போது வெளியான தகவலின்படி வழக்கமாக எப்போதுமே இந்திய அணி பயணம் செய்ய தனி விமானம் ஒதுக்கப்படும் ஆனால் தற்போது இந்தத் தொடருக்காக பிசிசிஐ வீரர்களுக்கான எந்த ஒரு தனி விமானம் ஏற்பாடு செய்யவில்லையாம்.

மேலும் வீரர்கள் ஒவ்வொருவரும் அவரவர் அவர்களது சொந்த செலவிலேயே அகமதாபாத் நகருக்கு வர வேண்டும் என்றும் கூறப்பட்டதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து அகமதாபாத்திற்கு வீரர்கள் பயணிகள் விமானம் மூலமாக வந்ததாலேயே வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 இந்தியாவில் நடக்குமா? சௌரவ் கங்குலி அதிகாரபூர்வ அறிவிப்பு – மைதானங்கள் இதோ

இது எப்படி இருப்பினும் தற்போது பாதிக்கப்பட்ட 7 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். எப்படி இருந்தாலும் இந்த ஒருநாள் தொடரானது தொடர்ந்து திட்டமிட்டபடி நடைபெறும் என பிசிசிஐ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by