ஐபிஎல் 2022 இந்தியாவில் நடக்குமா? சௌரவ் கங்குலி அதிகாரபூர்வ அறிவிப்பு – மைதானங்கள் இதோ

Ganguly-ipl
IPL MI
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரை நடத்துவதற்கான அனைத்து வேலைகளிலும் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதில் முதல் கட்டமாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கடந்த 2018க்கு பின் மீண்டும் முதல் முறையாக மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் நடைபெற உள்ள இந்த மெகா ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

Ipl cup

- Advertisement -

இவர்களை வாங்க 10 அணிகளும் பல கோடி ரூபாய்களுடன் போட்டி போட உள்ளதால் இந்த ஏலத்தை பார்க்க ஐபிஎல் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். முன்னதாக இந்த ஏலத்துக்கு முன்பாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கான சம்பள விவரங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் நடக்குமா :
இப்படி ஐபிஎல் 2022 தொடருக்கான வேலைகள் படுஜோராக நடைபெற்று வரும் போதிலும் இந்த தொடர் இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வி ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. ஏனெனில் கடந்த வருடம் வழக்கம்போல ஏப்ரல் மாதம் இந்தியாவில் துவங்கிய ஐபிஎல் 2022 தொடர் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகிய 6 மைதானங்களில் மட்டும் ரசிகர்கள் அனுமதியின்றி மூடப்பட்ட காலி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இருப்பினும் அந்த சமயத்தில் 29 போட்டிகள் மட்டும் நடைபெற்ற நிலையில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

IPL-bcci

அதன்பின் பல தடைகளுக்கு பின் கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு நாடுகளில் எஞ்சிய தொடரை வெற்றிகரமாக பிசிசிஐ நடத்தி முடித்தது. அதில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. எனவே இந்த வருடமும் ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்தினால் அதே போன்றதொரு சூழ்நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் பிசிசிஐ வட்டாரத்தில் காணப்படுகிறது.

- Advertisement -

சௌரவ் கங்குலி பதில்:
ஒருவேளை அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் இந்த வருடமும் துபாயில் நடத்துவதற்கான ஒரு திட்டத்தை பிசிசிஐ கையில் வைத்துள்ளது. மேலும் அதுபோன்ற நிலை ஏற்பட்டால் ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் நடத்துங்கள் என இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கனவே பிசிசிஐக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளன.

Ganguly

இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடர் திட்டமிட்டபடி இந்தியாவில் நடக்குமா என்ற கேள்விக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ள அதிகாரப்பூர்வ பதில் பின்வருமாறு. “தற்போதைய நிலைமை இப்படியே தொடருமானால் இந்த வருடம் ஐபிஎல் தொடர் இந்தியாவிலேயே நடக்கும். மைதானங்களை பற்றி பார்க்கும் போது மகாராஷ்டிரா, மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களை தேர்வு செய்துள்ளோம். நாக் அவுட் சுற்றுக்கான மைதானங்கள் பற்றிய முடிவுகள் பின்பு எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த வருடம் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் 10 அணிகள் பங்கேற்கும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் நடைபெற உள்ளது. அதில் 70 லீக் சுற்று போட்டிகளும் 4 பிளே ஆப் சுற்று போட்டிகளும் நடைபெற உள்ளது. முதலாவதாக நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றை இந்தியாவில் உள்ள மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடத்த உள்ளதாக சௌரவ் கங்குலி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

IPLNSG

மைதானங்கள்:
அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள புகழ்பெற்ற வான்கடே மைதானம், நவிமும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானம், டிஒய் பாட்டில் மைதானம் மற்றும் புனே நகரிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் மைதானம் ஆகிய 4 மைதானங்களில் ஐபிஎல் 2022 தொடரின் 70 லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் நடைபெற உள்ள பைனல் உள்ளிட்ட பிளே ஆப் சுற்று போட்டிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்கும் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக ஏற்கனவே நம்பத்தகுந்த செய்திகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் இந்தப் போட்டிகளை பார்ப்பதற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் ஐபிஎல் 2022 தொடருக்கான முழு அட்டவணை இன்னும் ஒரு சில நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஐபிஎல் போட்டிகளை காண மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப் படுவார்களா என்ற கேள்விக்கு பதில் தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement