IND vs PAK : ரிசர்வ் டே போட்டியில் ஒரு ஓவர் கூட ஹாரிஸ் ரவுப் பந்துவீசாதது ஏன்? – வெளியான தகவல்

Haris-Rauf
Advertisement

கொழும்பு நகரில் நேற்று செப்டம்பர் 10-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் போர் சுற்று போட்டியானது துவங்கியது. ஆனால் நேற்றைய போட்டியில் இந்திய அணி 24.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்திருந்த வேளையில் மழை குறுகிட்டதன் காரணமாக போட்டி தடைப்பட்டது.

அதன் பிறகு ரிசர்வ் டேவான இன்று போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியின் முடிவிலேயே இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி? எது என்பது குறித்த முடிவு நமக்கு தெரிய வரும்.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது பாகிஸ்தான் அணி சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசி 27 ரன்கள் கொடுத்திருந்த வேளையில் இன்று ரிசர்வ் டே போட்டியில் அவர் பந்து வீச மாட்டார் என்று பாகிஸ்தான் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் இப்திகார் அகமது மற்றும் ஆகா சல்மான் ஆகியோர் மீதமுள்ள ஓவர்களை வீசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஹாரிஸ் ரவுப் எஞ்சியுள்ள ஓவர்களை வீசாததற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி நேற்றைய போட்டியின் போது அவர் பந்து வீசுகையில் சில அசவுகரியங்களை சந்தித்தார் என்றும் அதன் பிறகு தசைப்பிடிப்பும் அவருக்கு ஏற்படவே இன்றைய ரிசர்வ் டே போட்டியில் அவர் பந்துவீச மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : IND vs PAK : நீங்க என்ன டாக்டரா? ஒரே வார்த்தையால் ரசிகர்களிடம் வசமாக சிக்கிய ரோஹித் சர்மா – அப்படி என்ன நடந்தது?

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கலும் ஹாரிஸ் ரவுபுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக அவர் பந்து வீசப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement