IND vs PAK : நீங்க என்ன டாக்டரா? ஒரே வார்த்தையால் ரசிகர்களிடம் வசமாக சிக்கிய ரோஹித் சர்மா – அப்படி என்ன நடந்தது?

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டமானது நேற்று செப்டம்பர் 10-ஆம் தேதி கொழும்பு நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 24.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்திருந்த வேளையில் மழை குறிக்கிட்டது.

இதன் காரணமாக இந்த போட்டியானது இன்று ரிசர்வ் டேவான இன்று செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது டாசுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்துள்ள ஒரு கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பெருமளவு கிண்டலை சந்தித்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த விக்கெட் கீப்பர் போஸ்ட்மேன் கே.எல் ராகுல் லீக் சுற்று போட்டிகளில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் விளையாடாமல் நேரடியாக சூப்பர் போர் சுற்று முதல் ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான பிளேயிங் லெவனில் இணைவதாக ரோகித் சர்மா அறிவித்தார்.

அதோடு ரோகித் சர்மா இப்படி கிண்டலை சந்திக்க காரணம் யாதெனில் : சமீபத்தில் காயத்திலிருந்து மீண்டு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் விளையாடியிருந்தார். ஆனால் அவர் நேற்று மீண்டும் முதுகு பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாகவே விளையாடவில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.

- Advertisement -

ரோகித் சர்மா இப்படி ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் என்று போட்டியின் சில மணி நேரங்களுக்கு முன்னதாக தெரிவித்ததால் ரசிகர்கள் ரோகித்தை : நீங்கள் என்ன டாக்டரா? போட்டிக்கு முன்னர் இப்படி கூறுவதற்கு என்ன காரணம்? என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : IND vs PAK : இப்படியா பேட்டிங் பண்ணுவீங்க? உங்களால நல்ல வாய்ப்பு போச்சு – 56 ரன்கள் குவித்தும் ரோஹித்தை விளாசிய கம்பீர்

மேலும் இஷான் கிஷன் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் நான்கு அரை சதங்கள் அடித்துள்ளதால் நல்ல பார்மில் இருக்கிறார் என்று குறிப்பிட்டு அவரை அணியில் இணைத்ததாக கூறியிருக்கலாம். ஆனால் அதை விடுத்தது ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் என்று சப்பை கட்டு கட்டுவதெல்லாம் தேவையில்லாத ஒன்று என்றும் ரசிகர்கள் ரோகித்தின் இந்த முடிவை கிண்டல் செய்து வருகின்றனர். நேற்றைய போட்டியில் இந்திய அணி சார்பாக நான்காவது வீரராக களம் இறங்கிய கே.எல் ராகுல் 28 பந்துகளை சந்தித்து 17 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement