IND vs PAK : இப்படியா பேட்டிங் பண்ணுவீங்க? உங்களால நல்ல வாய்ப்பு போச்சு – 56 ரன்கள் குவித்தும் ரோஹித்தை விளாசிய கம்பீர்

- Advertisement -

ஆசிய கோப்பை 2023 தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி துவங்கிய இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் நிறுத்தப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா மழை வருவதற்கு முன்பாக 24.1 ஓவரில் 147/2 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை பெற்றது. குறிப்பாக கடந்த போட்டியில் அச்சுறுத்தலை கொடுத்த பாகிஸ்தான் பவுலர்களுக்கு 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து பதிலடி கொடுத்த இந்திய துவக்க வீரர்களில் ரோஹித் சர்மா 56 ரன்களும் சுப்மன் கில் 58 ரன்களும் விளாசி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

அதிலும் குறிப்பாக கடந்த போட்டியில் தம்மை க்ளீன் போல்ட்டாக்கிய ஷாஹீன் அப்ரிடியை இப்போட்டியின் முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்த ரோகித் சர்மா மொத்தமாக 6 பவுண்டரி 4 சிக்சருடன் 114.29 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். இந்நிலையில் அந்த போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரோகித் சர்மா நல்ல துவக்கத்தை பெற்றதால் இந்தியா எளிதாக 370 – 375 ரன்கள் அடிப்பதற்கான அடித்தளத்தை பெற்றதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விமர்சித்த கம்பீர்:
ஆனாலும் சடாப் கானுக்கு எதிராக தொடர்ந்து சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் மோசமான ஷாட் அடுத்து தம்முடைய விக்கெட்டை ரோஹித் சர்மா பரிசளித்ததாக தெரிவிக்கும் அவர் பாகிஸ்தான் போன்ற தரமான பவுலிங்கை கொண்ட அணிக்கு எதிராக இது போன்ற சிறிய தவறு செய்தால் கூட வெற்றி பறி போய் விடும் என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“அதற்காக அவர் அதிகமாக ஏமாற்றத்தை சந்தித்திருப்பார். ரோஹித் அடித்த ஷாட் மிகவும் மோசமானது. அதற்காக தாம் விமர்சிக்கப்படுவதற்கு தகுதியானவர் என்பதை அவரும் அறிவார். ஏனெனில் அந்த சமயத்தில் பாகிஸ்தான் தடுமாறிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இந்தியா 370 – 375 ரன்கள் எடுக்கும் அளவுக்கு நல்ல துவக்கத்தை பெற்றது. ஆனால் ரோகித் சர்மா அந்த மோசமான சாட்டை அடித்து அவுட்டான அடுத்த ஓவரில் சுப்மன் கில்லும் அவுட்டானார்”

- Advertisement -

“பாகிஸ்தான் போன்ற தரமான பவுலிங்கை கொண்ட அணிக்கு எதிராக நீங்கள் இப்படி சிறிய வாய்ப்பை கூட கொடுக்கக் கூடாது. ஆனால் ஏற்கனவே 2 ஓவரில் 30 ரன்கள் அடித்த ஒரு பவுலருக்கு (சடாப் கான்) எதிராக நீங்கள் அந்த தவறை செய்துள்ளீர்கள். அதாவது உங்களுக்கு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்திய பவுலரிடம் நீங்கள் அப்படி அவுட்டாகியிருந்தால் பரவாயில்லை. மாறாக உங்களிடம் தடுமாறும் பவுலருக்கு எதிராக நீங்கள் நின்று விளையாடினால் அவரே உங்களுக்கு ஒவ்வொரு ஓவரிலும் 1 – 2 சுமாரான பந்துகளை கொடுப்பார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs PAK : 7 மணிநேரம் கஷ்டப்பட்டு வந்திருக்கேன். கொஞ்சம் பாத்து பண்ணுங்க. ஷாஹீன் அப்ரிடிக்கு – இந்திய ரசிகர் கோரிக்கை

இந்த நிலைமையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிசர்வ் நாளில் மீண்டும் இப்போட்டி நடத்துவதற்கான வேலைகளை மைதான பராமரிப்பாளர்கள் செய்து வருகின்றனர். இருப்பினும் இன்றும் கொழும்பு நகரில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பிருப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறுமா என்பது சந்தேகமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement