INDvsBAN : பவுலர் ஸ்டம்பை கையால் அடித்தது தெரிந்தும் தினேஷ் கார்த்திக்-க்கு ரன் அவுட் – கொடுக்கப்பட்டது ஏன்?

Dinesh-Karthik
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்றின் முக்கியமான போட்டி நேற்று அடிலெயிடு ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் பரபரப்புக்கு சற்றும் பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இறுதியில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது. அதன்படி இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது.

பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது. குறிப்பாக முதல் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவிந்திருந்த வேளையில் மழைக்கு குறுக்கிட்டது.

- Advertisement -

அதன்காரணமாக போட்டி 16 ஓவர்களில் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி மிகச் சிறப்பாக இலக்கினை துரத்திய வங்கதேச அணியானது 16 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 145 ரன்கள் குவித்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை தருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் 17-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் ரன் அவுட் ஆகிய விதம் தற்போது ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் வங்கதேச பவுலர் சொரிபுள் இஸ்லாம் பந்தை பிடித்தவுடன் பந்து நழுவி சென்று முதலில் ஸ்டம்பில் அடித்தது.

- Advertisement -

அதன் பின்னர் சொரிபுள் இஸ்லாம் தனது கையினால் ஸ்டம்பை தள்ளினார். ஆனாலும் இதை ரீப்ளே செய்து பார்த்த மூன்றாவது அம்பயர் அவுட் என்று அறிவித்தார். பந்து ஸ்டம்பில் படும்போது பையில் கீழே விழவில்லை. ஆனால் பவுலர் கைபட்ட பின்னர் தான் பைல்ஸ் விழுந்தது. இதனால் இது நாட் அவுட் தான். இது சரியான முடிவு கிடையாது என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : அவரோட ஆக்சன் வாசிம் அக்ரம் மாதிரியே இருக்கு, ஜஹீர் கான் மாதிரி வருவாரு – இந்திய வீரரை பாராட்டும் சயீத் அஜ்மல்

ஆனால் தினேஷ் கார்த்திக்-க்கு ரன் அவுட் மூலம் அவுட் கொடுக்கப்பட்டது ஏனென்றால் பந்து கையிலும் பட்டது பின்னர் ஸ்டம்பிலும் அடித்தது. பந்து ஸ்டம்பில் அடித்த நேரத்தில் பந்து தான் முதலில் பட்டதாகவும், பின்னர் அவரது கையும் அருகில் இருந்ததால் தினேஷ் கார்த்திக்-க்கு அவுட் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement