அவரோட ஆக்சன் வாசிம் அக்ரம் மாதிரியே இருக்கு, ஜஹீர் கான் மாதிரி வருவாரு – இந்திய வீரரை பாராட்டும் சயீத் அஜ்மல்

Ajmal
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக நவம்பர் 2ஆம் தேதியன்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அதிகபட்சமாக விராட் கோலி 64* (44) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் 184/5 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய வங்கதேசத்துக்கு எரிமலையாக பேட்டிங் செய்த லிட்டன் தாஸ் 60 (27) ரன்கள் குவித்து வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

Ravichandra Ashwin Rohit Sharma IND vs BAN

- Advertisement -

ஆனால் மழை நின்றதும் கேஎல் ராகுலிடம் அவர் ரன் அவுட்டான பின் அடுத்து வந்த வீரர்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சொதப்பியதால் வங்கதேசம் பரிதாபமாக தோற்றது. குறிப்பாக கடைசி நேரத்தில் நுருள் ஹசன் – தஸ்கின் அஹமத் ஆகியோர் அதிரடி காட்டியதால் கடைசி ஓவரில் அந்த அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டபோது சிறப்பாக செயல்பட்ட அரசஷ்தீப் சிங் வெறும் 14 ரன்கள் மட்டும் கொடுத்து வெற்றி பெற வைத்தார். கடந்த 2019 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி தன்னைத்தானே மெருகேற்றிய அவர் டெத் ஓவர்களில் அசத்தலாக செயல்பட்டதால் கடந்த ஜூலை மாதம் இந்தியாவுக்காக அறிமுகமானர்.

அசத்தும் அரஷ்தீப்:
அதில் பெரும்பாலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் சமீபத்திய ஆசிய கோப்பை மற்றும் தென்னாபிரிக்க தொடரில் சொதப்பி விமர்சனங்களை சந்தித்ததார். இருப்பினும் இடது கை பந்து வீச்சாளர் என்பதால் இந்த உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட அவர் பாபர் அசாம், குவின்டன் டீ காக் போன்ற தரமான பேட்ஸ்மேன்களை முக்கிய போட்டிகளில் பவர் பிளே ஓவரில் புதிய பந்தை ஸ்விங் செய்து சொற்ப ரன்களில் அவுட்டாக்கினார்.

Arshdeep-Singh

அதே போல் டெத் ஓவர்களிலும் அசத்தும் அவர் இதுவரை 9 விக்கெட்டுகளை சாய்த்து இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார். குறிப்பாக கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறிய பும்ரா இல்லாத குறையை போக்கும் அளவுக்கு அசத்தும் அவர் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளி வருகிறார். இந்நிலையில் அவருடைய பவுலிங் ஆக்சன் தங்களுடைய வாசிம் அக்ரம் போல் இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ஸ்விங் செய்வதில் கில்லாடியாகவும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த இடது கை வேகப்பந்து வீச்சாளராகவும் சாதனை படைத்துள்ள வாசிம் அக்ரம் மணிகட்டு போலவே அர்ஷிதீப் சிங் மணிகட்டு ஸ்டைல் இருப்பதாக பாராட்டும் அவர் ஜஹீர் கானுக்கு பின் இந்தியாவின் மிகச்சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளராக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அஜ்மல் பேசியது பின் வருமாறு. “அர்ஷிதீப் சிங், என்ன ஒரு பவுலர். அவருடைய மணிக்கட்டை வைத்து அவர் எந்த மாதிரி பந்து வீசப் போகிறார் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. குறிப்பாக பந்தை வெளிய நகர்த்துகிறாரா அல்லது உள்ளே கொண்டு வருகிறாரா என உங்களால் அறிய முடியாது”

ajmal

“அனேகமாக அவர் ஜஹீர் கானுக்கு பின் ஸ்விங் மற்றும் வேகத்தை கலந்து எதிரணி பேட்ஸ்மேன்கள் கண்டறிய முடியாத அளவுக்கு பந்து வீசும் முதல் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்று நினைக்கிறேன். அவர் லைனுக்கு வெளியேவும் உள்ளேயும் பந்தை கொண்டு வரும் திறமையை பெற்றுள்ளார். அதுபோன்ற பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினமாகும். வாசிம் அக்ரமும் இதே போல் பந்து வீசுவார் என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். அர்ஷிதீப் அபாரமாக பந்து வீசினார்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் 2 வருடங்களில் உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேனாக உயர்ந்துள்ள சூரியகுமார் யாதவ் பற்றி அவர் மேலும் பேசியது பின் வருமாறு. “சூரியகுமாரிடம் எனக்கு ஒரு விஷயம் மிகவும் பிடித்துள்ளது. அதாவது அவர் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்கிறார்.

இதையும் படிங்க : மழை வந்து காப்பாத்திடுச்சு, அடுத்த மேட்ச்ல இருந்து இந்தியா தோற்கணும்னு வேண்டுகிறேன் – முன்னாள் பாக் வீரர் ஓப்பன்டாக்

குறிப்பாக பவுன்ஸ் ஆகும் பிட்ச்சுகளில் இதர பேட்ஸ்மேன்கள் தடுமாறினாலும் அவர் மட்டும் பந்தை பேட்டில் நடுப்பகுதியில் அடித்து பயமின்றி செயல்படுகிறார். அவருடைய பேட்டிங் சிறப்பாக உள்ளது. அதனால் அவர் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்க தகுதியானவர்” என்று பாராட்டினார்.

Advertisement