தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கையால் டெஸ்ட் அறிமுக தொப்பியை பெற்ற துருவ் ஜுரேல் – பின்னணி என்ன தெரியுமா?

DK-and-Dhruv-Jurel
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி இன்று ராஜ்கோட் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி இந்திய அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் புதிதாக இரண்டு வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தவகையில் காயமடைந்து வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சர்பராஸ் கானிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

அதேபோன்று இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய கே.எஸ் பரத்திற்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளம் வீரர் துருவ் ஜுரேலுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 312-ஆவது வீரராக அறிமுகமான அவருக்கு அறிமுக தொப்பியை தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வழங்கியிருந்தார்.

இப்படி தினேஷ் கார்த்திக் கையால் துருவ் ஜுரேலுக்கு அறிமுக தொப்பையை வழங்க என்ன காரணம்? என்பது குறித்த சில கருத்துக்களை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம். அந்த வகையில் : எப்பொழுதுமே இந்திய அணிக்காக இளம் வீரர்கள் அறிமுகமாகும் போது ஏற்கனவே சாதித்த சில வீரர்கள் அல்லது முன்னாள் வீரர்கள், அல்லது விளையாடிக் கொண்டிருக்கும் அனுபவ வீரர்களின் கையால் கூட அறிமுக தொப்பியை வழங்கும் வழக்கம் இருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணிக்காக கடந்த 2004-ஆம் ஆண்டு அறிமுகமான தினேஷ் கார்த்திக் இதுவரை மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டுள்ளார். அதோடு சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 180 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அவர் பல ஆண்டுகால அனுபவிக்க வீரர் என்பதனால் தினேஷ் கார்த்திக் அவருக்கு அறிமுக தொப்பியை வழங்கியிருந்தார்.

இதையும் படிங்க : வேலையை காட்டிய கில். 33/3 என திணறும் இந்தியா.. 7 வருடத்துக்கு பின் நேர்ந்த பரிதாபம்.. போராடும் ரோஹித்

அதோடு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையான இந்த மூன்றாவது போட்டியில் அவர் வர்ணனையாளராக ராஜ்கோட் மைதானத்தில் இருந்து செயல்பட இருப்பதாலும், அவர் மைதானத்தில் நேரில் இருந்ததன் காரணமாகவும் அவரை அழைத்து இந்த கவுரவத்தை அணி நிர்வாகம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement