வேலையை காட்டிய கில். 33/3 என திணறும் இந்தியா.. 7 வருடத்துக்கு பின் நேர்ந்த பரிதாபம்.. போராடும் ரோஹித்

- Advertisement -

ராஜ்கோட் நகரில் பிப்ரவரி 15ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் இத்தொடர் சமனில் இருக்கிறது. எனவே இந்த போட்டியில் வென்று முன்னிலை பெறும் முனைப்புடன் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணியில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கடந்த போட்டியை போலவே அதிரடியாக 2 பவுண்டரியை பறக்க விட்டு சிறப்பாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வாலை 10 ரன்களில் அவுட்டாக்கிய மார்க் வுட் அடுத்ததாக வந்த சுப்மன் கில்லை டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

போராடும் ரோஹித்:
குறிப்பாக சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் கில் கடந்த போட்டியின் 2வது இன்னிங்சில் 104 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அதனால் ஃபார்முக்கு திரும்பி விட்டார் என்று நினைத்த நிலையில் மீண்டும் இந்த போட்டியில் டக் அவுட்டான அவர் தன்னுடைய வேலையைக் காட்டியுள்ளது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

அந்த நிலையில் அடுத்ததாக வந்த இளம் வீரர் ரஜத் படிதார் 5 ரன்களில் டாம் ஹார்ட்லி சுழலில் சிக்கினார். அப்படி 3 இளம் வீரர்கள் ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்ததால் 33/3 என இந்தியா தடுமாற்றமான துவக்கத்தை பெற்றது. சொல்லப்போனால் கடந்த 7 வருடங்களில் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் 35 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறுவது இதுவே முதல் முறையாகும்.

- Advertisement -

கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 35 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாற்றமான துவக்கத்தை பெற்றிருந்தது. இருப்பினும் அதை சரி செய்ய மறுபுறம் நிதானமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் தன்னுடைய சொந்த ஊரில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய வந்தார். அவருடன் சேர்ந்த ரோஹித் சர்மா அவசரப்படாமல் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க: நான் பெற்ற இந்த அறிமுக தொப்பியை அவருக்காக டெடிகேட் பண்றேன்.. அவர்தான் என்னோட ஹீரோ – துருவ் ஜுரேல் நெகிழ்ச்சி

முதலிரண்டு போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காமல் பின்னடைவை ஏற்படுத்தி வந்த அவர் இந்த போட்டியில் தன்னுடைய தரத்திற்கு நிகரான கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். அவருடைய கட்டுக்கோப்பான ஆட்டத்தால் 33/3 என தடுமாறிய இந்தியா முதல் நாள் உணவு இடைவெளியில் 93/3 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரோகித் சர்மா 52*, ரவீந்திர ஜடேஜா 24* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement