நான் பெற்ற இந்த அறிமுக தொப்பியை அவருக்காக டெடிகேட் பண்றேன்.. அவர்தான் என்னோட ஹீரோ – துருவ் ஜுரேல் நெகிழ்ச்சி

Dhruv-Jurel
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதியான இன்று ராஜ்கோட் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி இந்திய அணியானது தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நான்கு முக்கிய மாற்றங்களை ரோகித் சர்மா செய்திருந்தார். அந்த வகையில் காயமடைந்து வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சர்ஃபராஸ் கானும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான கே.எஸ் பரத்திற்கு பதிலாக துருவ் ஜுரேல் ஆகிய இருவரும் இன்றைய போட்டியில் அறிமுக வீரர்களாக தங்களது முதல் வாய்ப்பினை பெற்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணிக்காக 312-வது டெஸ்ட் வீரராக விக்கெட் கீப்பர் பேட்மேன் துருவ் ஜுரேல் அவர்கள் அறிமுகமானார். 23 வயதான துருவ் ஜுரேல் உத்தரப்பிரதேச அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். அதோடு 15 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 46.47 சராசரியுடன் மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி உள்ளார்.

அதோடு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பின்வரிசையில் பினிஷராக களமிறங்கிய அவர் 13 போட்டிகளில் 172 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 152 ரன்களை குவித்து அசத்தியதாலே அவர் பலராலும் அறியப்பட்ட வீரராக மாறினார். அதோடு 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணிக்காக கடந்த 2020-ஆம் ஆண்டு துணை கேப்டனாகவும் செயல்பட்ட அவர் சமீபத்தில் ரஞ்சி கோப்பை போட்டிகளிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இப்படி தனது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடுகள் காரணமாகவே அவருக்கு இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பில் சொதப்பிய கே.எஸ் பரத்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக இம்முறை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துருவ் ஜுரேலுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டிக்கு முன்னதாக தனது அறிமுக தொப்பியை கைப்பற்றிய அவர் தனது மகிழ்ச்சியை கண் கலங்கியபடி வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க : முத்தமிட்ட அப்பா.. அம்மாவின் கண்ணீரை துடைத்த சர்பராஸ் கான்.. 3வது டெஸ்டில் அடுத்தடுத்த நெகிழ்ச்சி நிகழ்வுகள்

அதோடு ஏற்கனவே அவர் அளித்திருந்த பேட்டியில் : ஒருவேளை இந்திய அணியின் அறிமுக தொப்பியை பெற்றால் அதனை எனது தந்தைக்காக தான் டெடிகேட் செய்வேன். ஏனெனில் என் தந்தை இல்லை என்றால் நான் இங்கு நின்று இருக்க முடியாது. என் தந்தை தான் என்னை வழிநடத்தி இவ்வளவு தூரம் பயணிக்க வைத்திருக்கிறார். அவரே என்னுடைய ஹீரோ என நெகிழ்ச்சியாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement