முத்தமிட்ட அப்பா.. மனைவியின் கண்ணீரை துடைத்த சர்பராஸ் கான்.. 3வது டெஸ்டில் அடுத்தடுத்த நெகிழ்ச்சி நிகழ்வுகள்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கியது. இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் இத்தொடர் சமனில் இருக்கிறது. எனவே இந்த போட்டியில் வென்று முன்னிலை பெறும் முனைப்புடன் களமிறங்கிய இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணியில் காயமடைந்த கேஎல் ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் சர்பராஸ் கான் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். அதே போல சுமாராக விளையாடி வந்த விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் நீக்கப்பட்டதால் இளம் வீரர் துருவ் ஜுரேலுக்கு அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த 2 வீரர்களுக்கும் முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் அனில் கும்ப்ளே மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் வாழ்த்துடன் அறிமுகத் தொப்பியை வழங்கினர்.

- Advertisement -

நெகிழ்ச்சி நிகழ்வு:
அப்போது சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோருடைய குடும்பத்தினரும் மைதானத்தில் இருந்தனர். அதில் தன்னுடைய மகன் மிகவும் போராடி இந்தியாவுக்காக அறிமுகமானதை நினைத்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் சர்பராஸ் கான் தந்தை கண்கலங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவரிடம் தன்னுடைய அறிமுக இந்திய தொப்பியை சர்பராஸ் கான் அருகில் சென்று காண்பித்தார்.

அந்த தொப்பியை கையில் வாங்கி தொட்டுப் பார்த்த சர்பராஸ் கான் தந்தை கண்ணீர் விட்டுக் கொண்டே முத்தமிட்டது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது. அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் அப்படியே அருகில் ஆனந்த கண்ணீர் விட்ட தம்முடைய மனைவியின் கண்களையும் துடைத்து அன்பை காட்டியது மைதானத்தில் இருந்த அனைவரையும் உணர்ச்சியில் ஆழ்த்தியது.

- Advertisement -

சமீபத்திய வருடங்களாகவே தொடர்ந்து ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய வந்த சர்பராஸ் கானுக்கு சீனியர்கள் இருந்ததால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. ஆனாலும் தொடர்ந்து கடினமாக போராடிய தங்களுடைய மகன் ஒரு வழியாக இந்திய அணிக்கு இன்று அறிமுகமானதாலேயே சர்பராஸ் கான் அப்பா இந்தளவுக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு வாழ்த்து தெரிவித்தனர் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: அக்சர் படேலுக்கு நீங்க பண்ணது அநியாயம்.. 3 ஆவது டெஸ்ட் போட்டியின் தேர்வு குறித்து வருத்தம் தெரிவித்த – ஆகாஷ் சோப்ரா

அதே போல துருவ் ஜுரேலுக்கும் அவருடைய குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நடைபெறும் போட்டியில் விராட் கோலி, ராகுல் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் இல்லாமல் இந்த இளம் வீரர்களுடன் களமிறங்கியுள்ள இந்திய அணி இங்கிலாந்தை தோற்கடித்து முன்னிலை பெறுவதற்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement