அக்சர் படேலுக்கு நீங்க பண்ணது அநியாயம்.. 3 ஆவது டெஸ்ட் போட்டியின் தேர்வு குறித்து வருத்தம் தெரிவித்த – ஆகாஷ் சோப்ரா

Aakash-Chopra
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதியான இன்று ராஜ்கோட் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ள வேளையில் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள வேளையில் தற்போது இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் அறிமுக வீரர்களாக விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் அவர் நேரடியாக பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார். அவரது இந்த வருகையால் குல்தீப் யாதவ் அல்லது அக்சர் படேல் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அக்சர் படேல் வெளியேற்றப்பட்டு குல்தீப் யாதவ் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசியதாலே குல்தீப் யாதவ் தக்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறப்பாக விளையாடி வரும் அக்சர் படேலை இப்படி திடீரென அணியிலிருந்து நீக்கியது அவருக்கு செய்த மிகப்பெரிய அநியாயம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

ரவிந்திர ஜடேஜா நல்ல உடற்தகுதியுடன் மீண்டும் அணியில் இடம் பெறுவது நல்ல விடயம் தான். ஆனால் அவருக்கு பதிலாக அக்சர் படேலை வெளியேற்றியது அவருக்கு செய்த அநியாயம். இரண்டாவது போட்டியின் போது குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி இருந்தார். அவர் ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் எல்லாம் சரிதான். ஆனால் அக்சர் படேல் அவரை விட அதிகமாக பந்துவீசி இருக்கிறார்.

இதையும் படிங்க : 3 ஆவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்டுள்ள 4 மாற்றங்கள்.. 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு – ரோஹித் சர்மா அதிரடி

அதுமட்டும் இன்றி அக்சர் படேல் பேட்டிங்கிலும் கை கொடுக்கக் கூடியவர். இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறும் போதெல்லாம் பின்வரிசையில் களமிறங்கி அவர் கை கொடுத்திருக்கிறார். எனவே அக்சர் படேலை அணியில் தொடர்ந்து விளையாட வைத்திருக்க வேண்டும். அதைவிடுத்து அவரை அணியிலிருந்து நீக்கியது வருத்தம் அளிப்பதாகவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement