3 ஆவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்டுள்ள 4 மாற்றங்கள்.. 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு – ரோஹித் சர்மா அதிரடி

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதியான இன்று ராஜ்கோட் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சை துவங்கி விளையாடி வருகிறது.

இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றனர்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மூன்றாவது போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு ஏற்கனவே இந்திய அணியில் பல வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும்? என்பது குறித்த பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது.

அந்த வகையில் இன்றைய மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நான்கு முக்கிய மாற்றங்களை ரோகித் சர்மா செய்துள்ளார். அதிலும் குறிப்பாக இரண்டு வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பினை வழங்கியுள்ளார். அந்த வகையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் சர்ஃபராஸ் கானிற்கு வாய்ப்பு அளித்துள்ளார். அதேபோன்று விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத்திற்கு ஓய்வளித்து விட்டு துருவ் ஜுரேலுக்கு அறிமுக வாய்ப்பு கொடுத்துள்ளார்.

- Advertisement -

அது தவிர்த்து கடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அக்சர் பட்டேல் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக மீண்டும் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் விளையாடுவதாகவும் அறிவித்துள்ளார். அதை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இல்லை. அதன்படி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடணும்னா இதை மட்டும் செய்யுங்க.. கில்லுக்கு அறிவுரை கூறிய – எம்.எஸ்.கே பிரசாத்

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) ரஜத் பட்டிதார், 5) சர்பராஸ் கான், 6) ரவீந்திர ஜடேஜா, 7) துருவ் ஜூரேல், 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement