இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விராட் கோலி, கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர்ர் ஆகியோர் இல்லாத வேலையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே இந்த போட்டியில் பங்கேற்க உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கும் விடயமாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
ஹைதராபாத்தில் தோல்வி அடைந்த பின்னர் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளது. ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பலம் சேர்த்து இருக்கிறது. ஏனெனில் ஜடேஜாவால் 3 விதமான துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும். அதன் காரணமாக அவரது கம்பேக் இந்திய அணிக்கு நிச்சயம் பலன் தான்.
அதே போன்று இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் இரண்டாவது போட்டியின் போது சதம் அடித்து மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளார். அனைத்து மைதானங்களிலும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்க்கும் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வந்த வேளையில் இரண்டாவது போட்டியில் அடித்த சதம் அவருக்கு தன்னம்பிக்கை கொடுத்திருக்கும். இந்த பார்மை அவர் தொடர்ச்சியாக கொண்டு செல்ல வேண்டும்.
இதையும் படிங்க : முதல் போட்டியில் இரட்டை சதம், மூன்றாவது போட்டியில் சதம்.. ஒரே தொடரில் கலக்கிய – இலங்கை வீரர்
தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் அடிக்க வேண்டுமெனில் அவரது நல்ல பார்மை தொடர வேண்டும். அப்படி சிறப்பான ரன் குவிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தினால் மட்டுமே தேர்வுக்குழுவினர் அவர் மீது நம்பிக்கை வைப்பார்கள். நிச்சயம் எதிர்வரும் போட்டியிலும் அவர் பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் அவரால் டெஸ்டில் நீண்ட தூரம் பயணிக்க முடியும் என எம்.எஸ்.கே பிரசாத் கூறியது குறிப்பிடத்தக்கது.