முதல் போட்டியில் இரட்டை சதம், மூன்றாவது போட்டியில் சதம்.. ஒரே தொடரில் கலக்கிய – இலங்கை வீரர்

Nissanka
- Advertisement -

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மூன்று விதமான தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றி இருந்த வேளையில் தற்போது ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த இலங்கை அணியானது இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இன்றைய போட்டியின் போது டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியானது இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 48.2 ஓவர்களில் 266 ரன்களில் சுருண்டது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹமத் ஷா 65 ரன்கள், ஓமர்சாய் 54 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது முதல் விக்கெட்டுக்கே 173 ரன்கள் சேர்த்து அசத்தியது. இலங்கை அணி சார்பாக முதல் விக்கெட்டாக அவிஸ்கா பெர்னாண்டஸ் 91 ரண்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

மற்றொரு புறம் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய துவக்க வீரர் பதும் நிசாங்கா 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது.

இதையும் படிங்க : பிட்ச் எப்படி இருந்தாலும் பும்ரா அசத்துவாரு.. இந்திய அணி சொந்த வலையில் விழக்கூடாது.. ஹர்பஜன் எச்சரிக்கை

இந்நிலையில் இந்த தொடரின் போது முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்த நிசாங்கா மூன்றாவது போட்டியிலும் சதம் அடித்து அசத்தியதால் அவருக்கு ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement