பிட்ச் எப்படி இருந்தாலும் பும்ரா அசத்துவாரு.. இந்திய அணி சொந்த வலையில் விழக்கூடாது.. ஹர்பஜன் எச்சரிக்கை

harbhajan singh
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. அதில் முதலிரண்டு போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் சமனில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கும் மூன்றாவது போட்டியில் வென்று முன்னிலை பெறுவதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

முன்னதாக சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் போன்ற ஒரு சில வீரர்களை தவிர்த்து ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் சுமாராக செயல்பட்டு வருகின்றனர். அதனால் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியாவை இரண்டாவது போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா அபாரமாக பந்து வீசி 9 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருது வென்று வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

வலையில் விழக்கூடாது:
இந்நிலையில் பிட்ச் எப்படி இருந்தாலும் அதில் அசத்தக்கூடிய திறமை பும்ராவிடம் இருப்பதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். ஆனால் இங்கிலாந்தை வீழ்த்துவதற்காக தங்களுடைய பலமான சுழலுக்கு சாதகமான மைதானத்தை இந்திய அணி அமைக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏனெனில் அது போன்ற மைதானங்களில் டாஸ் அதிர்ஷ்டத்தை இழந்தால் வெற்றி பெறுவது கடினம் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஏதோ ஒரு இடத்தில் இந்தியா கீழே சரிந்துள்ளது. எனவே இந்திய அணி நிர்வாகம் உட்கார்ந்து தற்போதைய அணுகு முறையை முன்னோக்கி எடுத்துச் செல்லலாமா? வேண்டாமா என்பதை பற்றி விவாதிக்க வேண்டும். இந்தியா மகத்தான வீரர்களைக் கொண்ட நல்ல அணியாக இருக்கிறது”

- Advertisement -

“குறிப்பாக பிட்ச்சில் எந்த விதமான உதவி கிடைக்காவிட்டாலும் அங்கே அசத்தக்கூடிய பும்ரா போன்ற பவுலர் நம்மிடம் இருக்கிறார். அதே போல நம்மிடம் தேவையான ஸ்பின்னர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால் நம்மைப் போலவே நம்முடைய எதிரணியும் தேவையான திட்டங்களுடன் தயாராகி வருவார்கள் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க: ஒன்னா சேர்ந்தா முடியாது.. 3வது டெஸ்டில் பும்ராவை அடிப்பதற்கான திட்டம் பற்றி.. பேசிய பென் ஸ்டோக்ஸ்

“எனவே சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்து இந்தியா தங்களுடைய வலையிலேயே விழுந்து விடக்கூடாது. அது போன்ற சூழ்நிலையை டாஸ் முக்கியமாக இருக்கிறது. ஒருவேளை நீங்கள் அதை வெல்லாவிட்டால் கடைசியில் வெற்றி கிடைப்பதும் கடினமாகிறது. பொதுவாக நீங்கள் டாஸ் அதிர்ஷ்டத்தை இழந்தாலும் போட்டியில் வெல்ல வேண்டும். ஆனால் அது சுழலுக்கு சாதகமான மைதானங்களில் நடப்பது மிகவும் கடினமாகும்” என்று கூறினார்.

Advertisement