ஒன்னா சேர்ந்தா முடியாது.. 3வது டெஸ்டில் பும்ராவை அடிப்பதற்கான திட்டம் பற்றி.. பேசிய பென் ஸ்டோக்ஸ்

Ben Stokes 4
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் அந்த அணியை வீழ்த்திய இந்தியா 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி 9.30 மணிக்கு ராஜ்கோட் நகரில் துவங்க உள்ளது.

முன்னதாக இந்தியாவை இத்தொடரில் வீழ்த்துவோம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்த இங்கிலாந்து அணி முதல் போட்டியில் அதை செய்தும் காட்டியது. ஆனால் இரண்டாவது போட்டியில் ஃபிளாட்டான பிட்ச்சில் அபாரமாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்தின் வெற்றிக்கு குறுக்கே நின்று இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

சவாலாக நிற்கும் பும்ரா:
அதனால் மூன்றாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்த வேண்டுமெனில் அதற்கு முதலில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பும்ராவை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில் அணியாக சேர்ந்து பும்ராவை எதிர்கொண்டால் அடிக்க முடியாது என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். எனவே உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் பும்ராவை ஒவ்வொரு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் தனித்தனியான திட்டங்களுடன் எதிர்கொள்ளப் போவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் ராஜ்கோட்டில் தன்னுடைய 100வது சாதனை டெஸ்ட் போட்டியில் விளையாடுவது பற்றியும் பென் ஸ்டோக்ஸ் பேசியது பின்வருமாறு. “ஜஸ்பிரித் பும்ரா நம்ப முடியாத பவுலர். நீண்ட காலமாக அதை நிரூபித்து வரும் அவர் முதலிரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். எனவே பும்ராவை சமாளிப்பதற்கு ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் தங்களுடைய சொந்த வழியை பின்பற்ற முயற்சிக்க வேண்டும்”

- Advertisement -

“அந்த வகையில் அவருக்கு எதிராக நாங்கள் ரன்கள் அடிக்க வேண்டும். அதைத் தான் நாங்கள் செய்யப் போகிறோம். ஆனால் அதுவும் வேலைக்காகவில்லை எனில் நீங்கள் பவுலருக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். முதலிரண்டு போட்டியில் பும்ரா அபாரமாக செயல்பட்டார். குறிப்பிட்ட சில பவுலர்களுக்கு எதிராக நீங்கள் அணியாக சேர்ந்து வெற்றிகரமாக விளையாடுவதற்கு எந்த வழியும் இல்லை”

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவா? பாண்டியாவா? ஜெய் ஷா மறைமுக அறிவிப்பு

“100 டெஸ்ட் போட்டிகளில் நான் ஒரு அங்கமாக இருந்தேன் என்று என்னால் சொல்ல முடியும் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். ஏனெனில் அதற்கு நீங்கள் நிறைய பயிற்சிகளை செய்ய வேண்டும். இந்த ஒரு போட்டியை போல இன்னும் எனக்கு நிறைய போட்டிகள வரும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் விராட் கோலி, கே.எல் ராகுல் போன்ற சில முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement