விராட் கோலிக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றார். குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவத்தை கொண்ட காரணத்தால் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் இந்தியாவின் உலகக் கோப்பை தாகத்தை தனிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல் அவரது தலைமையில் சாதாரண இரு தரப்பு தொடர்களில் எதிரணிகளை வழக்கம் போல தெறிக்க விட்ட இந்தியா தரவரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறியது.
ஆனால் அழுத்தமான 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் ரோஹித் சர்மா தலைமையில் தோல்வியை சந்தித்த இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் ஆஸ்திரேலியாவிடம். தோல்வியை சந்தித்தது அதை விட 2023 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் மிரட்டிய இந்தியா தொடர்ந்து 10 வெற்றிகளைப் பெற்று மிரட்டியது.
ஜெய் ஷா அறிவிப்பு:
அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மீண்டும் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. மேலும் சமீப கலங்களாகவே டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட முடியாமல் ரோகித் சர்மா தடுமாறி வருகிறார்.
எனவே அவரை கழற்றி விட்டு 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற அனுபவமிகுந்த ஹர்திக் பாண்டியாவை 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. அதனால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் டி20 கேரியர் கேள்விக்குறியானது. ஆனால் ஹர்திக் பாண்டியா தற்போது காயமடைந்துள்ள நிலையில் கடந்த மாதம் நடந்த ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் அந்த 2 ஜாம்பவான்களும் விளையாடினார்கள்.
எனவே அவர்கள் டி20 உலகக் கோப்பை விளையாடுவதும் கிட்டத்தட்ட உறுதியானது. இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்தாலும் 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தான் இந்தியாவின் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசி செயலாளர் ஜெய் ஷா மறைமுகமாக அறிவித்துள்ளார். இது பற்றி ராஜ்கோட் மைதானத்துக்கு புதிய பெயர் சூட்டும் விழாவில் அவர் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: 1739 நாட்கள்.. ஷாகிப்பின் 5 வருட சாதனையை தகர்த்த முகமது நபி.. 39 வயதில் அபார உலக சாதனை
“2023 உலகக் கோப்பை ஃபைனலில் நாம் தோல்வியை சந்தித்திருக்கலாம். ஆனால் அதில் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்ற நாம் பலரின் இதயங்களை வென்றோம். தற்போது 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா கேப்டன்ஷிப் தலைமையில் வெஸ்ட் இண்டீஸில் உள்ள பார்படாசில் இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது” என்று கூறினார்.