தேவ்தத் படிக்கல் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வாக சேப்பாக்கம் மைதானத்தில் செய்த – இந்த சம்பவம் தான் காரணமாம்

Padikkal
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் 2 போட்டிகள் நடைபெற்று முடிந்த வேளையில் அடுத்ததாக பிப்ரவரி 15-ஆம் தேதி துவங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் விலகியுள்ளார்.

இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இடது கை ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பல வீரர்கள் இந்திய அணிக்காக காத்திருக்கும் வேளையில் 23 வயதான இடது கை ஆட்டக்காரரான இவரை இந்திய அணியில் தேர்வுசெய்ய என்ன காரணம்? என்பது குறித்த கேள்விகளும் அதிகரித்துள்ளன.

- Advertisement -

அந்த வகையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக சில தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரின் சி சுற்று போட்டியில் தமிழக அணிக்கெதிராக சென்னை மண்ணில் நடைபெற்ற போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய படிக்கல் 218 பந்துகளை சந்தித்து 151 ரன்கள் குவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக தமிழக பந்துவீச்சாளர்களான சந்தீப் வாரியர், சாய் கிஷோர், விஜய் சங்கர் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக 12 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என அவர் அடித்து விளாசி 151 ரன்கள் குவித்ததை அஜீத் அகார்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் நேரில் கண்டு ரசித்துள்ளனர்.

- Advertisement -

அதோடு முக்கியமான நேரத்தில் அவர் அடித்த அந்த ரன்கள் கர்நாடகா அணிக்காக பெரிய அளவில் உதவியது. அதோடு இந்த போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் இந்திய ஏ அணிக்காகவும் இடம்பிடித்திருந்த படிக்கல் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : இந்திய மீடியாக்களுக்கு குத்து விட்டாச்சு.. அதை மட்டும் செஞ்சா ஜெயிச்சுடலாம்.. இங்கிலாந்துக்கு இயன் பெல் ஆலோசனை

இப்படி இந்திய ஏ அணிக்காகவும் சரி, ரஞ்சி கோப்பை போட்டியில் கர்நாடக அணிக்காகவும் சரி மிகச்சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியதாலே அவர் மீது நம்பிக்கை வைத்த தேர்வுக்குழு அவரை இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement