இந்திய மீடியாக்களுக்கு குத்து விட்டாச்சு.. அதை மட்டும் செஞ்சா ஜெயிச்சுடலாம்.. இங்கிலாந்துக்கு இயன் பெல் ஆலோசனை

- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி இத்தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து ஆரம்பத்திலேயே எச்சரித்தனர். அதை முதல் போட்டியில் இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி செயலிலும் செய்து காட்டிய இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்த இந்தியாவை இரண்டாவது இன்னிங்ஸில் ஓலி போப் 196 ரன்கள் அடித்த உதவியுடன் இங்கிலாந்து தோற்கடித்தது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் சுதாரித்து விளையாடிய இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் எங்களை அவ்வளவு சுலபமாக வீழ்த்த முடியாது என்பதை இங்கிலாந்துக்கு காட்டியுள்ளது.

- Advertisement -

குத்து விட்டாச்சு:
இந்நிலையில் இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக 5 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து தோற்கும் என இந்திய ஊடகங்கள் கணிததாக முன்னாள் வீரர் இயன் பெல் கூறியுள்ளார். ஆனால் முதல் போட்டியிலேயே வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே இந்திய ஊடகங்களுக்கு குத்து விட்டதாக அவர் பாராட்டியுள்ளார்.

மேலும் ஓலி போப் போல அடுத்து வரும் போட்டிகளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பெரிய சதம் அடித்தால் கண்டிப்பாக இந்திய மண்ணில் இத்தொடரை வெல்ல முடியும் என்று ஆலோசனை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “5 – 0 என்ற கணக்கில் இந்தியா வெல்லும் என்று அந்நாட்டு ஊடகங்கள் இத்தொடர் துவங்குவதற்கு முன்பாகவே நம்பிக்கையுடன் இருந்தன. ஆனால் இங்கிலாந்தை பற்றி இந்திய அணி கவலைப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை”

- Advertisement -

“இந்த சூழ்நிலையில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து உண்மையான குத்துகளை கொடுத்து ஆரம்பத்திலேயே இந்தியாவை பின்னுக்கு தள்ளியது. எனவே ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் முன்னிலையில் இருப்பதற்கு முதல் போட்டியில் ஓலி போப் பெரிய சதமடித்ததை போல செயல்பட வேண்டும். இப்போதைய நிலைமையிலும் இங்கிலாந்து அச்சுறுத்தலை கொடுப்பவர்களாக இருக்கின்றனர்”

இதையும் படிங்க: மெய்டன் ஓவர் போட்டா ஃபோர் அடிக்கும்.. இந்தியாவுக்கு எதிரான மாஸ் திட்டம் பற்றி பேசிய ரீஹன் அஹமத்

“இந்திய பேட்டிங் வரிசையில் அற்புதமான திறமை இருக்கிறது. ஆனால் அதில் சந்தேகமும் இருக்கிறது. நிறைய திறமை இருந்தும் தற்சமயத்தில் இந்திய அணி அதிக அழுத்தத்தில் இருப்பதாக நான் கருதுகிறேன். தற்போதைய நிலைமையில் தொடர் சமநிலையில் இருக்கிறது. எனவே முதல் போட்டியில் ஓலி போப் விளையாடியதைப் போல மீண்டும் செயல்பட்டால் நம்மால் இந்தியா மீது தொடர்ந்து அழுத்தத்தை போட முடியும்” என்று கூறினார்.

Advertisement