மெய்டன் ஓவர் போட்டா ஃபோர் அடிக்கும்.. இந்தியாவுக்கு எதிரான மாஸ் திட்டம் பற்றி பேசிய ரீஹன் அஹமத்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் வென்ற இந்திய அணி தக்க பதிலடி கொடுத்து 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. அதனால் அடுத்த போட்டியில் இங்கிலாந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது.

முன்னதாக இந்த தொடரில் 4 ஸ்பின்னர்களுடன் இங்கிலாந்து களமிறங்கியது. அதில் டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர், ஜேக் லீச் போன்ற ஸ்பின்னர்கள் ஓரளவு இந்தியாவுக்கு சவாலை கொடுத்து நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினர். ஆனால் 19 வயதாகும் இளம் ஸ்பின்னர் ரீஹன் அஹ்மத் மட்டும் இந்த தொடரில் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்று சொல்லலாம்.

- Advertisement -

போர் அடிக்கும்:
பொதுவாக பவுலர்கள் தொடர்ச்சியாக ரன்களை கொடுக்காமல் மெய்டன் ஓவர்களை வீசினால் தாமாகவே பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தம் ஏற்பட்டு விக்கெட்டுகள் கிடைக்கும். ஆனால் தம்மைப் பொறுத்த வரை மெய்டன் ஓவர்கள் வீசுவது அலுப்புத் தட்டும் செயல் என்று தெரிவிக்கும் ரீகன் அகமது 4 மோசமான பந்துகளை வீசினாலும் ஒரு விக்கெட்டை எடுப்பதே சிறந்த பவுலிங் எனக் கூறியுள்ளார்.

அதற்காக 4 பவுண்டரிகள் கொடுத்தாலும் பரவாயில்லை என்று தெரிவிக்கும் அவர் இந்த திட்டத்தை பின்பற்றியே இந்திய தொடரில் பந்து வீசுவதாகவும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மெய்டன் ஓவர்களை வீசுவது எனக்கு பிடிக்காது. அது மிகவும் அலுப்பு தட்டும் (போரிங்) செயல் என்று கருதுகிறேன். எங்களுடைய கேப்டன் மற்றும் எங்களுக்கு கிடைக்கும் ஆதரவு சிறப்பாக இருக்கிறது”

- Advertisement -

“அவர்கள் சில நேரங்களில் மோசமாக வெளிப்படும் செயல்பாடுக்காக கவலைப்படுவதில்லை. எனவே அதை பயன்படுத்தி நீங்கள் எப்படி அசத்துகிறீர்கள் என்பது முக்கியம். ஒருவேளை நான் நான்கு மோசமான பந்துகளை வீசி பின்னர் ஒரு விக்கெட்டை எடுத்தால் அது தொடர்ச்சியாக 16 நல்ல பந்துகளை வீசுவதை விட சிறந்த பவுலிங். இது அணியை பற்றி மேலும் கூறுகிறது”

இதையும் படிங்க: அவரோட பேட்டிங் தோனியின் காப்பி மாதிரி இருக்கு.. ஆப்கானிஸ்தான் வீரரை பாராட்டிய சுனில் கவாஸ்கர்

“அதன் காரணமாக இந்த அணியுடன் நான் வசதியாக இருப்பதாகவும் உணர்கிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் மூன்றாவது போட்டி வரும் பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் விராட் கோலி போன்ற சில முக்கிய வீரர்கள் இல்லாததை பயன்படுத்தி இந்தியாவை தோற்கடிக்க இங்கிலாந்து முயற்சிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement