அவரோட பேட்டிங் தோனியின் காப்பி மாதிரி இருக்கு.. ஆப்கானிஸ்தான் வீரரை பாராட்டிய சுனில் கவாஸ்கர்

- Advertisement -

பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி தயாராக இருக்கின்றன. அந்த வரிசையில் 2 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த வருடம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் 3வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது.

குறிப்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க்கை 24.75 கோடி என்ற வரலாற்றின் உச்சகட்ட தொகைக்கு வாங்கிய கொல்கத்தா முஜீப் உர் ரஹ்மான், ரூத்தர்போர்ட் போன்ற வெளிநாட்டு வீரர்களையும் வாங்கியது. இதைத்தொடர்ந்து அந்த அணியின் பிளேயிங் லெவனில் ஏற்கனவே தக்க வைக்கப்பட்ட ஆண்ட்ரே ரசல், சுனில் நரேன் ஆகியோருடன் ஸ்டார்க் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

தோனியின் காப்பி:
இருப்பினும் 4வது வெளிநாட்டு வீரராக ஓப்பனிங்கில் இங்கிலாந்தை சேர்ந்த ஜேசன் ராய் மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோரிடையே போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது போன்ற சூழ்நிலையில் கிட்டத்தட்ட இந்திய ஜாம்பவான் எம்எஸ் தோனியின் நகலை போல பேட்டிங் செய்யும் திறமையை கொண்டுள்ள ரஹ்மனுல்லா குர்பாஸ் கொல்கத்தா அணியில் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இதுவரை நான் பார்த்ததை வைத்து ரஹ்மனுல்லா குர்பாஸ் பேட்டிங்கை விரும்புகிறேன். மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் தன்மையைக் கொண்டுள்ள அவர் கிட்டத்தட்ட எம்எஸ் தோனியின் லேசான காப்பியை போல பேட்டிங் செய்யும் திறமையைக் கொண்டுள்ளார். அதனாலேயே அவருடைய ஆட்டத்தை நான் விரும்பலாம்”

- Advertisement -

“மேலும் இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பை முடிந்தவுடன் சாலை ஓரத்தில் தூங்கும் ஏழைகளுக்கு அவர் தம்மால் முடிந்த பண உதவி செய்தார். அந்த வகையில் நல்ல மனதையும் கொண்டுள்ள அவர் கண்டிப்பாக கொல்கத்தா அணியில் இருக்க வேண்டும். இருப்பினும் பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி பெறுவது எளிதானதல்ல. அதற்கு இந்த நான்கு வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும். குறிப்பாக கடந்த வருடத்தை போல ரிங்கு சிங் அசத்த வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஏர்போர்ட்டிலேயே தடுத்த நிறுத்தப்பட்ட இங்கிலாந்து வீரர்.. 2 மணிநேரம் நீடித்த பிரச்சனை – விவரம் இதோ

இந்த நிலையில் கொல்கத்தாவுக்கு இரண்டு கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த கெளதம் கம்பீர் இந்த வருடம் அந்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே மிட்சேல் ஸ்டார்க், ரிங்கு சிங் போன்ற நல்ல வீரர்களை கொண்டுள்ள கொல்கத்தா 10 வருடங்கள் கழித்து இம்முறை கோப்பையை வெல்லுமா என்பதே அந்த அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement