ஏர்போர்ட்டிலேயே தடுத்த நிறுத்தப்பட்ட இங்கிலாந்து வீரர்.. 2 மணிநேரம் நீடித்த பிரச்சனை – விவரம் இதோ

ENG
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று(1-1) என்ற கணக்கில் சமநிலையில் வகிக்கின்றன.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இரண்டாவது போட்டி முடிந்து மூன்றாவது போட்டி நடைபெற 10 நாட்கள் வரை இடைவெளி இருந்ததால் இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று பின்னர் நேற்று ராஜ்கோட் திரும்பி இருந்தனர்.

- Advertisement -

அதேபோன்று இங்கிலாந்து அணியினரும் அபுதாபி சென்றடைந்து தற்போது மீண்டும் ராஜ்கோட் நகருக்கு வந்தடைந்துள்ளனர். இந்நிலையில் அப்படி ராஜ்கோட் வந்த இங்கிலாந்து வீரர் ரேகன் அகமது விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏனெனில் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட அவர் ஏற்கனவே இங்கிலாந்தில் இருந்து இந்தியா பயணிக்கும் போது ஒன் டைம் விசாவிலேயே இங்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது மீண்டும் அவர் அபுதாபி சென்று இந்தியா திரும்பி உள்ளதால் அவர் புதியதாக விசா எடுக்க வேண்டும் நிலை ஏற்பட்டது.

- Advertisement -

பின்னர் ராஜ்கோட் விமான நிலைய அதிகாரிகள் பிரச்சனையை சரி செய்யும் விதமாக அவருக்கு குறுகிய காலத்தில் இரண்டு நாட்கள் விசாவை வழங்கினர். அதனை ஏற்றுக் கொண்ட இந்திய அணியின் நிர்வாகமும் அவரது விசா பிரச்சனையை 24 மணி நேரத்தில் தீர்த்து கொடுப்பதாக இங்கிலாந்து அணி நிர்வாகத்திடம் தெரிவித்தது.

இதையும் படிங்க : நண்பனுக்காக ஹெல்ப் பண்றதை நானும் பாத்தேன்.. நேரலையில் தல தோனியை பாராட்டிய கில்கிறிஸ்ட்

இதன் காரணமாக இரண்டு மணி நேரம் அங்கேயே காத்திருந்த இங்கிலாந்து அணியின் வீரர்கள் அனைவரும் பின்னர் இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்த பிறகே அங்கிருந்து புறப்பட்டு ராஜ்கோட் மைதானத்திற்கு சென்றடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement