நண்பனுக்காக ஹெல்ப் பண்றதை நானும் பாத்தேன்.. நேரலையில் தல தோனியை பாராட்டிய கில்கிறிஸ்ட்

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 2024 சீசன் அடுத்த மாதம் இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் விளையாட உள்ளது. அந்த அணியை நட்சத்திர ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி இந்த சீசனிலும் வழி நடத்த உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் இந்தியாவுக்கு 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்த அவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். அதில் கடந்த வருடம் 41 வயதிலும் லேசான முழங்கால் வலியுடன் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய அவர் சென்னை 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

நண்பனுக்காக தோனி:
அந்த வரிசையில் இந்த வருடம் 6வது கோப்பையை வெல்வதற்காக இப்போதே பயிற்சிகளை துவங்கியுள்ள தோனி வலைப்பயிற்சியில் “பிரைம் ஸ்போர்ட்ஸ்” எனும் ஸ்டிக்கரை தன்னுடைய பேட்டில் ஒட்டியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதாவது கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக தன்னுடைய ஆரம்ப காலங்களில் உதவிய பரம்ஜித் சிங் என்ற தோனியின் நண்பர் ராஞ்சியில் பிரைம் ஸ்போர்ட்ஸ் எனும் பெயரில் விளையாட்டு உபகரணங்கள் கடையை நடத்தி வருகிறார்.

அதை பற்றிய விவரத்தை 2016ஆம் ஆண்டு வெளியான எம்எஸ் தோனி : தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் ரசிகர்களால் இப்போதும் பார்க்க முடியும். அப்படி ஆரம்ப காலத்தில் உதவிய தன்னுடைய நண்பனின் வளர்ச்சிக்காக தற்போது பிரைம் ஸ்போர்ட்ஸ் எனும் ஸ்டிக்கரை தன்னுடைய பேட்டில் தோனி ஒட்டியுள்ளார். தனது பேட்டில் இடம் பெறுவதற்காக பல முன்னணி நிறுவனங்கள் பலகோடிகளுடன் ஸ்பான்சர்ஷிப் செய்வதற்கு தயாராக இருக்கும் நிலையில் நண்பனுக்காக தோனி செய்த இந்த செயல் செய்துள்ளது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் நண்பனுக்காக தோனி செய்யும் உதவியை தாமும் பார்த்ததாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டியுள்ளார். இது பற்றி ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியா இரண்டாவது டி20 போட்டியில் அவர் நேரலையில் பேசியது பின்வருமாறு. “வலைப்பயிற்சியில் இப்போதே தோனி பந்துகளை அடிப்பதை நான் பார்த்தேன்”

இதையும் படிங்க: 2024 ஐபிஎல் தொடருடன் தோனி ரிட்டையராக மாட்டார்.. ஒற்றைக் காலில் ஆடுனாலும் அதுக்கு பஞ்சமிருக்காது.. இர்பான் பதான்

“அவருடைய பேட்டில் புதிதாக ஒரு ஸ்டிக்கரும் இருக்கிறது. அது உள்ளூரில் இருக்கும் தோனியின் பள்ளி வயது நண்பனின் கடையாகும். அந்த கம்பெனியின் பெயரை அனைவருக்கும் தெரியப்படுத்தி வியாபாரத்தை பெருக்குவதற்காக தோனி இதை செய்துள்ளார்” என்று கூறினார். இது போல தம்முடைய ஆரம்ப காலங்களில் உதவிய மேலும் சில நண்பர்கள் நடத்தும் நிறுவனங்களின் பெயரையும் சமீப காலங்களில் தோனி தன்னுடைய பேட்டில் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement