2024 ஐபிஎல் தொடருடன் தோனி ரிட்டையராக மாட்டார்.. ஒற்றைக் காலில் ஆடுனாலும் அதுக்கு பஞ்சமிருக்காது.. இர்பான் பதான்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடர் விரைவில் துவங்க உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு வழக்கம்போல 10 அணிகள் போட்டியிட உள்ளன. அதில் ஜாம்பவான் எம்.எஸ். தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து கோப்பையை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் இருக்கிறது.

மேலும் 41 வயதை கடந்துள்ள எம்எஸ் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இருப்பினும் 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரிலும் கடந்த சில வருடங்களாகவே விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் தன்னை தல என்று கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்களுக்காக தம்மால் முடிந்தளவுக்கு அவர் விளையாடுகிறார்.

- Advertisement -

ஒற்றை காலில் ஆடுனாலும்:
குறிப்பாக கடந்த வருடம் முழங்காலில் காயத்தை சந்தித்த அவர் தொடர்ந்து வலியுடன் அனைத்து போட்டிகளிலும் நன்றாகவே விளையாடி சென்னை 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதனால் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் சமன் செய்த அவர் இந்த வருடம் 6வது கோப்பையை வெல்ல வேண்டும் என்பது சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

இந்நிலையில் இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரிலிருந்து தோனி ஓய்வு பெற மாட்டார் என்று நம்புவதாக இர்பான் பதான் கூறியுள்ளார். மேலும் கடந்த வருடத்தை போல ஒற்றைக்கால் தெம்புடன் தோனி விளையாடினால் கூட அவரைப் பார்ப்பதற்கு பஞ்சமில்லாமல் ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என்றும் இர்பான் பதான் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார்ட் ஸ்போர்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கண்டிப்பாக இது தோனியின் கடைசி சீசனாக இருக்காது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அவரை நான் நேரில் சந்தித்தேன். தற்போது அவர் நீண்ட முடிகளை வளர்த்துள்ளார். அந்த வகையில் தன்னுடைய கடந்த காலத்திற்கு சென்றுள்ள அவர் ஃபிட்டாக இருக்கிறார். எனவே 40 வயதை கடந்தும் ஃபிட்டாக இருக்கும் அவர் ரசிகர்களுக்காக தொடர்ந்து விளையாடுவார் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: கேரியர் முடியுறப்போ அண்ணன் சர்ப்ராஸை தம்பி முஷீர் கான் முந்திடுவாரு.. முன்னாள் இந்திய வீரர் கணிப்பு

“ஒருவேளை எம்எஸ் தோனி ஒற்றைக் காலில் விளையாடினால் கூட ரசிகர்கள் அவரைப் பார்க்க விரும்புவார்கள். மேலும் இது கடைசி ஐபிஎல் தொடராக இருந்தால் அவர் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்த நான் விரும்புகிறேன். அவர் எப்போதும் ஐபிஎல் தொடரையும் சிஎஸ்கே அணியையும் விட்டு செல்ல மாட்டார். ஏனெனில் சிஎஸ்கே தான் தோனி. தோனி தான் சிஎஸ்கே. அதில் எந்த வேறுபாடும் இல்லை” என்று கூறினார்.

Advertisement