கேரியர் முடியுறப்போ அண்ணன் சர்ப்ராஸை தம்பி முஷீர் கான் முந்திடுவாரு.. முன்னாள் இந்திய வீரர் கணிப்பு

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று முடிந்த ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் உதய் சஹரன் தலைமையில் விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக சீனியர் கிரிக்கெட்டில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஃபைனல்களில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த இந்தியா மீண்டும் இத்தொடரில் வீழ்ந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இருப்பினும் இந்த தொடரில் கேப்டன் உதய் சஹரன் போன்ற சில இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருங்காலத்தில் இந்திய அணிக்கு அசத்தப் போகும் நட்சத்திரங்களாக தங்களை அடையாளப்படுத்தினர். அந்த வரிசையில் மிடில் ஆர்டரில் விளையாடிய இளம் வீரர் முசீர் கான் இந்த தொடரில் 6 போட்டிகளில் 360 ரன்களை 60 என்ற சராசரியில் குவித்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அண்ணனை மிஞ்சும் தம்பி:
அத்துடன் இரண்டு சதங்கள் அடித்த அவர் ஒரு அண்டர்-19 உலகக் கோப்பையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஷிகர் தவான் சாதனையையும் சமன் செய்தார். மொத்தத்தில் மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் சர்பராஸ் கானின் தம்பியான அவர் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய அண்ணனுக்கு நிகராக ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் கேரியரின் முடிவில் சர்பராஸ் கானை விட முஷீர் கான் சிறந்த வீரராக திகழ்வதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா வித்தியாசமான கணிப்பை தெரிவித்துள்ளார். ஏனெனில் சர்ப்ராஸை விட முசீர் கான் பேட்டிங் டைமிங் சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முஷீர் கானை நான் மிகவும் விரும்புகிறேன். கேரியர் முடியும் போது அண்ணனை விட தம்பி முன்னிலையில் செயல்படுவார். அற்புதமான டைமிங்கை பரிசாக கொண்டிருப்தே முஷீர் கானிடம் இருக்கும் நல்ல விஷயமாகும். தன்னுடைய கால்களில் நன்றாக விளையாடும் அவர் நேராக விளையாடுகிறார். அதனால் அந்த இடத்தில் பந்து வரும் போது அதை அவர் எளிதாக எதிர்கொள்கிறார். சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளும் இந்த குழந்தையிடம் நல்ல ஷாட்டுகளும் இருக்கிறது”

இதையும் படிங்க: இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்துக்கு பிரகாசமான சான்ஸ் கிடைச்சுருக்கு.. காரணம் இது தான்.. ஸ்டுவர்ட் ப்ராட் கணிப்பு

“இருப்பினும் பின்னங்காலில் விளையாடுவதில் அவரிடம் லேசான பலவீனம் இருக்கிறது. எனவே அதில் மட்டும் அவர் வேலை செய்ய வேண்டும். மேலும் நீங்கள் நீண்ட காலம் விளையாட விரும்பினால் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக உங்களுடைய ஆட்டத்தை முன்னேற்ற வேண்டும்” என்று கூறினார். இந்த நிலையில் இந்திய அணிக்காக விரைவில் சர்பராஸ் கான் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement