இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்துக்கு பிரகாசமான சான்ஸ் கிடைச்சுருக்கு.. காரணம் இது தான்.. ஸ்டுவர்ட் ப்ராட் கணிப்பு

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் வீழ்த்திய இந்தியா 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. இந்த நிலையில் இத்தொடரில் கடைசி மூன்று போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அதில் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் விளையாடாத அவர் தற்போது தன்னுடைய 13 வருட கேரியரில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாடாமல் வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

- Advertisement -

பிரகாசமான வாய்ப்பு:
போதாகுறைக்கு கேஎல் ராகுல் 3வது போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலி இல்லாதது இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து தோற்கடிப்பதற்கான வாய்ப்பை பிரகாசமாகியுள்ளதாக முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் ப்ராட் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் மிகவும் போட்டி மிகுந்ததாக இருந்தது. இது நான் பார்த்த இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் தொடர்களில் மிகவும் சுவாரசியமானது. இந்தியா கடந்த போட்டியில் வென்றது. ஆனால் இங்கிலாந்து பின்பற்றும் பஸ்பால் ஸ்டைல் இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது”

- Advertisement -

“தற்போது விராட் கோலி அணியில் இல்லாததால் இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்துக்கு பிரகாசமான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகச் சிறப்பாக போட்டி போட்டுள்ளார்கள். அவர்கள் மோதிய தருணங்கள் மிகவும் பிரபலமானது. அதை இந்த தொடரில் நம்மால் பார்க்க முடியாது என்பது அவமானமாகும். இருப்பினும் கடந்த போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்ததை நாம் பார்த்தோம்”

இதையும் படிங்க:உலகிலேயே அந்த ஐபிஎல் அணிக்கு தான்.. விஸ்வாசமான ரசிகர்கள் இருக்காங்க.. இர்பான் பதான் வியப்பு

“அதே சமயம் இது இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகும். மேலும் ஆண்டர்சன் போல சவாலான மைதானத்தில் பும்ரா போட்டியை வெல்லும் அளவுக்கு அபாரமாக பந்து வீசினார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் மூன்றாவது போட்டி ராஜ்கோட் நகரில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி துவங்குகிறது. அதில் ஏற்கனவே இரண்டாவது போட்டியில் விராட் கோலி இல்லாமலேயே வென்றதைப் போல் போராடி இங்கிலாந்தை தோற்கடிக்க இந்தியா தயாராகியுள்ளது

Advertisement