உலகிலேயே அந்த ஐபிஎல் அணிக்கு தான்.. விஸ்வாசமான ரசிகர்கள் இருக்காங்க.. இர்பான் பதான் வியப்பு

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2024 டி20 தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. அந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து 10 அணிகளும் தயாராக துவங்கியுள்ளன. அதில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

ஏனெனில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள அவ்விரு அணிகளுக்கு தான் ஐபிஎல் தொடரில் ஏராளமான ரசிக பட்டாளங்கள் உள்ளனர் என்றே சொல்லலாம். இருப்பினும் அந்த 2 அணிகளுக்கு சவாலை கொடுத்து பெங்களூரு, ராஜஸ்தான் கொல்கத்தா போன்ற இதர அணிகளும் கோப்பையை வெல்ல போராட உள்ளன.

- Advertisement -

விஸ்வாசமான ரசிகர்கள்:
இந்நிலையில் சென்னை, மும்பை அணிகளை விட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தான் ஐபிஎல் தொடரில் விஸ்வாசமான ரசிகர்கள் இருப்பதாக இர்பான் பதான் வியப்புடன் கூறியுள்ளார். மேலும் விராட் கோலி ஆர்சிபி அணிக்காக கோப்பையை வென்றால் அது ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஆர்சிபி மற்றும் அதன் ரசிகர்களுக்கு இடையே இருக்கும் உறவை இதற்கு முன் மற்ற எந்த லீக் அணியிடமும் நான் பார்த்ததில்லை. இந்த மொத்த உலகத்திலும் அவர்களுக்குத் தான் மிகவும் விஸ்வாசமான ரசிகர்கள் இருக்கின்றனர். இத்தனைக்கும் அவர்கள் ஒரு கோப்பையை கூட வென்றதில்லை. அவர்கள் கோப்பையை சில முறை நெருங்கி வந்தும் கோட்டை விட்டனர்”

- Advertisement -

“குறிப்பாக 2016 சீசன் விராட் கோலி மற்றும் பெங்களூரு அணிக்கு மிகவும் ஸ்பெஷலானது. அந்தத் தொடரை அவர்கள் வெல்வார்கள் என்று நான் நினைத்தேன். ஒருவேளை விராட் கோலி மற்றும் ஆர்சிபி ஆகியோர் இந்த சீசனில் கோப்பையை வென்றால் அது ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2008 முதல் இதுவரை பெங்களூரு அணி ஒரு கோப்பையை கூட வென்றதில்லை.

இதையும் படிங்க: அப்படின்னா 3வது டெஸ்டில் அறிமுகம்ன்னு சொல்லுங்க.. முக்கிய வீரர் விலகளால் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு?

இருப்பினும் விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற மகத்தான வீரர்கள் விளையாடிய அந்த அணி ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச ஸ்கோர் உள்ளிட்ட நிறைய சாதனைகள் படைத்துள்ளது. அதன் காரணமாக நிச்சயம் ஒருநாள் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் மும்பை மற்றும் சென்னை அணிகளை மிஞ்சும் அளவுக்கு பெங்களூருவுக்கு ஈ சாலா கப் நம்தே என்ற கோஷத்துடன் அந்த அணி ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement