அப்படின்னா 3வது டெஸ்டில் அறிமுகம்ன்னு சொல்லுங்க.. முக்கிய வீரர் விலகளால் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு?

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதலிரண்டு போட்டிகளை போலவே சொந்தக் காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவையும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.

முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இத்தொடரின் இரண்டாவது போட்டியில் நட்சத்திர வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயத்தால் வெளியேறினார்கள். அதை தொடர்ந்து கடைசி மூன்று போட்டிகளில் அந்த இரண்டு வீரர்களும் காயத்தை பொறுத்து விளையாடுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா காயத்திலிருந்து குணமடைந்துள்ளதால் மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

அறிமுகமாகும் சர்ப்ராஸ் கான்:
ஆனால் கேஎல் ராகுல் இன்னும் குணமடையாததால் 3வது போட்டியில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. எனவே அவருக்கு பதிலாக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் மற்றொரு கர்நாடகாவை சேர்ந்த வீரர் தேவதூத் படிக்கல் 3வது போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் காரணமாக மூன்றாவது போட்டியில் ராகுலுக்கு பதிலாக ஏற்கனவே அணியில் காத்திருக்கும் மற்றொரு இளம் வீரர் சர்பராஸ் கான் அறிமுகமாக களமிறங்குவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று முக்கிய வீரர்கள் மூன்றாவது போட்டியில் விளையாடப் போவதில்லை. அதில் விராட் கோலி விளையாடிய இடத்தில் ஏற்கனவே ரஜத் படிதார் கடந்த போட்டியில் அறிமுகமாக களமிறங்கினார்.

- Advertisement -

அந்த வரிசையில் தற்போது கேஎல் ராகுலுக்கு பதிலாக சர்பராஸ் கான் அறிமுகமாக களமிறங்க உள்ளார். அதே சமயம் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளில் அசத்தக்கூடிய ரவீந்திர ஜடேஜா மூன்றாவது போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்து விளையாட உள்ளார். கடந்த சில வருடங்களாகவே ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து பெரிய ரன்கள் அடித்து வந்த சர்பராஸ் கான் இந்திய அணியில் விளையாடுவதற்கு போராடி வந்தார்.

இதையும் படிங்க: 3 ஆவது டெஸ்டில் வேணாம்.. 4 ஆவது டெஸ்ட்ல அவருக்கு ரெஸ்ட் குடுத்துடலாம் – ரோஹித் போட்டுள்ள பக்கா பிளான்

இருப்பினும் சீனியர்கள் இருந்ததால் புறக்கணிக்கப்பட்டு வந்த அவர் இந்த தொடரில் முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியதால் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து ஒரு வழியாக மிகுந்த போராட்டத்திற்கு பின் அவர் இந்திய அணிக்காக 3வது போட்டியில் அறிமுகமாக களமிறங்கப் போகிறார் என்பது பெரும்பாலான ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இந்த வாய்ப்பை பொன்னாக மாற்றி அவர் சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.

Advertisement