3 ஆவது டெஸ்டில் வேணாம்.. 4 ஆவது டெஸ்ட்ல அவருக்கு ரெஸ்ட் குடுத்துடலாம் – ரோஹித் போட்டுள்ள பக்கா பிளான்

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்க உள்ளது. இந்த எஞ்சியுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த மூன்றாவது போட்டியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது.

மேலும் மூன்றாவது போட்டியில் எந்தெந்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படும்? ஒரு சிலருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் இந்த போட்டிக்கு முன்னதாக காத்திருக்கிறது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் முன்னணி வீரர்கள் சிலர் காயம் காரணமாக விளையாட முடியாமல் இருக்கும் சூழலில் சில வீரர்கள் அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் ரஜத் பட்டிதார் ஏற்கனவே கடந்த போட்டியில் அறிமுகமான வேளையில் சர்பராஸ் கான் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அறிமுகமாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான அணியில் துணை கேப்டனான ஜஸ்ப்ரீத் பும்ராவின் பெயரும் இடம்பெற்றிருக்கும் வேளையில் பணிச்சுமை காரணமாக அவருக்கு மூன்றாவது போட்டியில் ஓய்வு வழங்கப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எடுத்துள்ள முடிவின்படி : இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் இந்த தொடரில் எஞ்சியுள்ளதால் மூன்றாவது முக்கியமான போட்டியில் அவரை விளையாட வைத்துவிட்டு நான்காவது டெஸ்ட் போட்டியின் போது ஓய்வு கொடுக்கலாம் என்று ரோகித் திட்டமிட்டுள்ளாராம்.

இதையும் படிங்க : 3வது டெஸ்ட் போட்டியில் விலகிய கேஎல் ராகுல்.. ஜடேஜா விளையாடுவாரா? மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ

ஏனெனில் மூன்றாவது போட்டியில் ஒருவேளை இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தும் பட்சத்தில் கடைசி இரண்டு போட்டிகளில் அதே நம்பிக்கையுடன் இந்திய அணி பயணிக்கும் என்பதனால் இந்த போட்டியில் அவரை விளையாட வைத்துவிட்டு நான்காவது போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கலாம் என ரோகித் சர்மா திட்டம் தீட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement