3வது டெஸ்ட் போட்டியில் விலகிய கேஎல் ராகுல்.. ஜடேஜா விளையாடுவாரா? மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பெற்றுள்ளதால் தொடர் சமநிலையில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து இத்தொடரின் கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அதில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாகவும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் அமைந்தது. அத்துடன் இரண்டாவது போட்டியில் காயத்தை சந்தித்து வெளியேறிய கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா உடல் தகுதியை வைத்தே 3வது போட்டியில் விளையாடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

ராகுல் விலகல்:
இந்நிலையில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி துவங்க உள்ள மூன்றாவது போட்டிக்கு முன்பாக கேஎல் ராகுல் முழுமையாக குணமடைய மாட்டார் என்பது தெரிய வந்துள்ளது. அதனால் அவர் ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதே சமயம் இரண்டாவது போட்டியில் காயத்தால் விளையாடாத ரவீந்திர ஜடேஜா அதிலிருந்து குணமடைந்துள்ளார். சொல்லப்போனால் மூன்றாவது போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியுடன் இணைந்துள்ள அவர் ராஜ்கோட் நகரில் பயிற்சிகளை துவங்கியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வந்துள்ளன. எனவே அவர் மூன்றாவது போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

இருப்பினும் கேஎல் ராகுல் மூன்றாவது போட்டியில் விளையாட மாட்டார் என்பதால் அவருக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த மற்றொரு பேட்ஸ்மேன் தேவ்தூத் படிக்கள் சேர்க்கப்பட உள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பையில் 193, 42, 31, 103, 151, 36 என தொடர்ந்து பெரிய ரன்கள் அடித்து வரும் அவர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற பயிற்சி போட்டியிலும் சதமடித்திருந்தார்.

இதையும் படிங்க: அதெல்லாம் பாகிஸ்தானில் கிடைக்காது.. பிஎஸ்எல் விட ஐபிஎல் தான் பெஸ்ட்.. சிக்கந்தர் ராசா பேட்டி

அந்த வகையில் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டு வருவதால் ராகுலுக்கு பதிலாக படிக்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் அவருக்கு உடனடியாக வாய்ப்பு கிடைக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் சில முக்கிய வீரர்கள் இல்லாமல் விளையாடி வெற்றி காண வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement