அதெல்லாம் பாகிஸ்தானில் கிடைக்காது.. பிஎஸ்எல் விட ஐபிஎல் தான் பெஸ்ட்.. சிக்கந்தர் ராசா பேட்டி

- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசன் அடுத்த மாதம் இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் தரத்திலும் பணத்திலும் பல்வேறு பரிணாமங்களை கடந்து இன்று சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அளவுக்கு மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது என்றே சொல்லலாம்.

மேலும் இந்தத் தொடர் இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் வெளிநாடு அணிகளுக்கும் நிறைய தரமான வீரர்களை கண்டறிந்து கொடுக்கும் பெருமையைக் கொண்டுள்ளது. அத்துடன் இத்தொடரில் விளையாடுவதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் சம்பளமாக கொடுக்கப்படுவதால் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

- Advertisement -

ஐபிஎல் பெஸ்ட்:
ஆனாலும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை விட தங்களுடைய நாட்டில் நடைபெறும் பிஎஸ்எல் தான் உலகிலேயே நம்பர் ஒன் டி20 தொடர் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் பெருமை பேசுவது வழக்கமாகும். இந்நிலையில் பிஎஸ்எல் தொடரை விட ஐபிஎல் தொடரில் தான் உலகம் முழுவதிலும் இருந்து பல தரமான வீரர்கள் விளையாடுவதாக நட்சத்திர ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா கூறியுள்ளார்.

மேலும் அனைத்து போட்டிகளிலும் ஏராளமான ரசிகர்கள் வந்து ஆதரவு கொடுப்பதால் ஐபிஎல் தொடர் தான் பிஎஸ்எல் தொடரை விட சிறந்தது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டை விளையாடுவதை சிறந்த பயிற்சி இருக்க முடியாது. எனவே ஐஎல் டி20 தொடர் உயர்தரத்தில் இருக்கிறது. இங்கிருந்து நான் பிஎஸ்எல் தொடரில் விளையாட உள்ளேன். அந்தத் தொடருக்காக நான் காத்திருக்கிறேன்”

- Advertisement -

“ஐஎல் டி20 மற்றும் பிஎஸ்எல் ஆகிய இரண்டு தொடர்களுமே ஐபிஎல் தொடருக்கு நான் தயாராக உதவும். களத்தில் இறங்கி விளையாடுவதற்கு மாற்று நேரம் கிடையாது என்று நான் கருதுகிறேன். எனவே இது ஐபிஎல் தொடருக்கு நான் தயாராக உதவியாக இருக்கும். ஐபிஎல் தொடரில் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு வீரர்கள் விளையாடுவதற்கு தயாராக இருப்பதே அந்த தொடரின் ஸ்பெஷல் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க:இது டெஸ்ட் தொடருக்கு அவமானம்.. ஆனா ஏற்கனவே இந்தியா சாதிச்சதை மறக்காதீங்க.. ஸ்டுவர்ட் ப்ராட் கருத்து

“ஐபிஎல் தொடரில் நாங்கள் விளையாடும் பெரும்பாலான போட்டிகளுக்கு ரசிகர்கள் வந்து ஆதரவு கொடுப்பார்கள். அது ஐபிஎல் தொடரை பொறுத்த வரை வித்தியாசமானது. எனவே உலகின் சிறந்த லீக் என்று சொல்லும் போது ஐபிஎல் மற்ற தொடர்களை விட வெகு தொலைவில் முன்னணியில் இருக்கிறது. பிஎஸ்எல் தொடரும் கிட்டத்தட்ட சிறந்த தொடராகும். நான் இப்படி ஒப்பிடுவதற்கு ரசிகன் கிடையாது. ஆனால் ஆம் ஐபிஎல் இந்த உலகிலேயே சிறந்த லீக் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement