இது டெஸ்ட் தொடருக்கு அவமானம்.. ஆனா ஏற்கனவே இந்தியா சாதிச்சதை மறக்காதீங்க.. ஸ்டுவர்ட் ப்ராட் கருத்து

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால் தொடர் சமனில் (1 – 1*) இருக்கிறது. முன்னதாக இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகினார்.

அது எதிர்பார்த்ததை போலவே முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த நிலையில் விரைவில் தன்னுடைய இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதால் மனைவியுடன் இருக்க விரும்பிய காரணத்தாலேயே இங்கிலாந்து தொடரிலிருந்து விராட் கோலி விலகியதாக அவருடைய நண்பர் மற்றும் தென்னாபிரிக்க முன்னாள் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்தார்.

- Advertisement -

தொடருக்கு அவமானம்:
ஆனால் விராட் கோலி எதுவும் சொல்லாத நிலையில் தம்முடைய கருத்து தவறாக இருக்கலாம் என்று ஏபி டீ வில்லியர்ஸ் பின்னர் மன்னிப்பும் கேட்டார். அந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் கடைசி 3 போட்டிகளிலும் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாகவும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது.

இந்நிலையில் விராட் கோலி போன்ற மகத்தான வீரர் விலகியுள்ளது இந்த 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடருக்கு அவமானம் என முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். இருப்பினும் விராட் கோலி இல்லாமலேயே இரண்டாவது போட்டியில் வென்றதாக வென்ற இந்தியா தொடர்ந்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து வெற்றிக்கு போராடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் இல்லாதது இந்த தொடருக்கு அவமானமாகும். ஆனால் இந்தியா கடந்த போட்டியில் அவர் இல்லாமலேயே வென்றது. மிகவும் தரமான வீரரான விராட் கோலியிடம் ஆர்வம், நெருப்பு ஆகியவை இருக்கும். ஆனால் சொந்த காரணங்களும் முக்கியம். அதே சமயம் இது இளம் வீரர்களுக்கு அற்புதமான வாய்ப்பாகும்”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியுடன் இணைந்த கத்ரினா கைஃப்.. விளம்பர தூதராக அவர் நியமிக்கப்பட – என்ன காரணம் தெரியுமா?

“பஸ்பால் ஆட்டத்தை நான் விரும்புகிறேன். தற்போது இந்த தொடர் சமனில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் பஸ்பால் வேலை செய்யும் என்பதை இங்கிலாந்து காட்டியுள்ளது. குறிப்பாக ஹைதராபாத் போட்டியில் இங்கிலாந்து வெளிப்படுத்திய செயல்பாடு கவரும் வகையில் இருந்தது. நாங்கள் பாகிஸ்தானில் 3 – 0 என்ற கணக்கில் தொடரை வென்று நியூசிலாந்திலும் நன்றாக விளையாடினோம். எனவே பஸ்பால் இந்த விளையாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான மன நிலையாகும்” என்று கூறினார்

Advertisement