சி.எஸ்.கே அணியுடன் இணைந்த கத்ரினா கைஃப்.. விளம்பர தூதராக அவர் நியமிக்கப்பட – என்ன காரணம் தெரியுமா?

Katrina-Kaif
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் 17-வது சீசன் எதிர்வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலமும் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் துபாயில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது.

அதனை தொடர்ந்து தற்போது இந்த சீசனுக்கான ஆயத்த பணிகளில் அனைத்து அணிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் எதிர்வரும் சீசனுக்கான விளம்பர ஒப்பந்தங்கள், விளம்பர படப்பிடிப்புகள் மற்றும் பயிற்சி முகாம் என அனைத்து அணிகளின் நிர்வாகங்களும் திட்டமிட்டு அதற்கான வேலைகளை செய்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் சிஎஸ்கே அணியானது நடப்பு சீசனில் தாங்கள் அணிய இருக்கும் புதிய ஜெர்ர்சியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அந்த விழாவில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் இடம்பெற்றது அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்து இருந்தது.

மேலும் இப்படி அவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள என்ன காரணம்? என்பது குறித்த புதிய தகவலும் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கடந்த 16 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் டைட்டில் ஸ்பான்ஸராக இந்தியா சிமெண்ட் நிறுவனமே இருந்து வந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது இந்த ஆண்டிற்கான சி.எஸ்.கே அணியின் டைட்டில் ஸ்பான்ஸராக ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே அந்த விமான நிறுவனத்தின் விளம்பர தூதராக இருக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இம்முறை சிஎஸ்கே அணிக்கான விளம்பர தூதராகவும் செயல்பட இருக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : எதுக்கு ரஞ்சி கோப்பையெல்லாம் வச்சிகிட்டு.. பேசாம அந்த தொடரை ரத்து பண்ணிடுங்க – மனோஜ் திவாரி விரக்தி

எனவே எதிர்வரும் சீசனில் சிஎஸ்கே அணி வீரர்கள் பங்கேற்கும் அனைத்து விளம்பரங்களிலும் கத்ரினா கைப்பும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று போட்டிகளையும் நேரில் கண்டுகளித்து அணியை ஊக்கப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement